ராஜ்சிறி பதி

ராஜ்சிறி பதி,(பிறப்பு 15 ஏப்ரல் 1956) இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபரும் வணிக நிர்வாகியுமாவர்.  கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ராஜ்சிறி குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இந்திய வடிவமைப்பு மன்றத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். [1] ராஜ்சிறி குழுமம் உணவு மற்றும் விவசாயம், ஆற்றல், பயணம், உடல்நலம், விருந்தோம்பல் மற்றும் கலை என பல்வேறு வணிக தளங்களில் இயங்கி வருகிறது. ராஜ்சிறி, கோயம்புத்தூரில் நிகழ்கால கலை இயக்கம் மற்றும் சமகால கலைகளுக்கான கோவை மையம் போன்றவைகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அமைப்புகளை நடத்தி வருகிறார்.

ராஜ்சிறி பதி
பிறப்பு15 ஏப்ரல் 1956 (1956-04-15) (அகவை 67)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
பணிநிறுவனத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், ராஜ்சிறி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம், இந்திய வடிவமைப்பு மன்றம்
வாழ்க்கைத்
துணை
எஸ்.பதி
பிள்ளைகள்2
விருதுகள்பத்மசிறீ (2013)

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ராஜ்சிறி பதி, தெலுங்கர்களான பூ. சா. கோ குடும்பத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜி. வரதராஜின் மகளாவார். [2] லட்சுமி ஆலைகளின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.பதியை மணமுடித்துள்ளார்.

தொழில் வாழ்க்கை தொகு

ராஜ்சிறி சர்க்கரை மற்றும் இரசாயனங்கள் நிறுவனம் என்பது சர்க்கரை, வடித்திறக்கல், மின் உற்பத்தி மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த தயாரிப்பு நிறுவனமாகும். இநிறுவனம் அவரது தந்தை ஜி. வரதராஜ் [3]அவர்களால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.  ராஜ்சிறி நிறுவன தயாரிப்புகளில் வெள்ளை சர்க்கரை, மதுபானம் , கரிம உரம், உயிர் பொருட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை அடங்கும். [4]

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The business of design". Mint. 24 February 2012. http://www.livemint.com/2012/02/24204127/The-business-of-design.html. 
  2. (in en) Journal of Indian History. Department of History, University of Kerala. 2006. பக். 181. https://books.google.com/books?id=WXJDAAAAYAAJ&q=psg+rangaswamy+naidu+telugu. 
  3. Kannan, Shilpa (2015-11-04). "'I'm a daughter – I'm not allowed to participate'" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/business-34712846. 
  4. "She's not just a sugar baroness – Livemint". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்சிறி_பதி&oldid=3719108" இலிருந்து மீள்விக்கப்பட்டது