ராஜ்பத்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராஜ்பத் (Rajpath, இந்தி: राजपथ; பொருள்: "மன்னரின் வழி") இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இரைசினா குன்றில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விஜய் சௌக்கு, இந்தியாவின் வாயில் வழியாக தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் வரை அமைந்துள்ள பொதும்பர் சாலையாகும். இந்த நிழற்சாலையின் இருபுறங்களிலும் பெரிய புற்றரைகள், கால்வாய்கள், மர அடுக்குகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மையான சாலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இங்கு ஆண்டுதோறும் சனவரி 26 அன்று குடியரசுநாள் அணிவகுப்பு நடைபெறுகின்றது. இந்தச் சாலை கிழக்கு-மேற்காக அமைந்துள்ளது. இதனை வடக்கு-தெற்காக உள்ள ஜன்பத் குறுக்கிடுகின்றது.

இரைசினா குன்றின் மீது இராஜ்பத்தின் இருபுறமும் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் அமைந்துள்ளன. இச்சாலையின் ஒரு முனையில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ளது. விஜய் சௌக்கில் சன்சத் மார்கு குறுக்கிடுகின்றது; இந்தியா கேட்டிலிருந்து வரும்போது வலதுபுறத்தில் இந்திய நாடாளுமன்ற இல்லத்தைக் காணலாம். காந்தி திரைப்படத்தின் துவக்கக் காட்சி இராஜ்பத்திலிருந்து துவங்குகின்றது.