ராணி அமீது
ராணி அமீது (Rani Hamid) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். 1985 ஆம் ஆண்டு ராணி வங்காள தேச நாட்டின் முதல் பெண் பன்னாட்டு மாசுட்டர் ஆனார். 20 முறை உள்நாட்டு தேசிய அளவு சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய வெற்றியாளர் ஆனார். தனது 75 ஆவது வயதில் 38 ஆவது பெண்கள் தேசிய வெற்றியாளர் போட்டியில் வெற்றியாளராக ராணி அமீது முடிசூட்டப்பட்டார்.[1][2] 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் நாட்டின் 20 ஆவது தேசிய மகளிர் வெற்றியாளர் பட்டத்தை வென்றார். பிரிட்டிசு மகளிர் சதுரங்க வெற்றியாளர் போட்டியை மூன்று முறை வென்றுள்ளார்.[3] 2018 ஆம் ஆண்டு மண்டல வெற்றியாளராகவும் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியில் பத்திரிகையாளர்கள் தேர்வு விருதை இவர் பெற்றார். உருசியாவில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
ராணி அமீது Rani Hamid | |
---|---|
রাণী হামিদ | |
தாய்மொழியில் பெயர் | রাণী হামিদ |
பிறப்பு | சாயீதா இயசிமுன்னிசா காதுன் 1944 சூலை 14 சில்லெட்டு, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
நாடு | வங்காளதேசம் |
பட்டம் | பெண்கள் பன்னாட்டு மாசுட்டர் (1985) |
உச்சத் தரவுகோள் | 2189 (அக்டோபர் 2007) |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஅமீது 1944 இல் சில்லெட்டில் சயீதா யாசிமுன்னேசா காதுன் பிறந்தார். 34 வயதில் இவர் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார்.[4] 1985 ஆம் ஆண்டு முதன் முதலாக இவருக்கு பிடே அமைப்பின் பெண்கள் பன்னாட்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மொத்தமாக அமீது வெற்றி பெற்றுள்ள 19 பட்டங்களில் 1979 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேசிய வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[4] வங்காளதேசத்தில் ஒரு பெண் பெற்ற அதிக அளவிலான மகளிர் வெற்றியாளர் பட்டங்கள் ஆகும். மேலும், இவர் 1983, 1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய மகளிர் வெற்றியளர் பட்டங்களையும் வென்றுள்ளார்.[3]
ராணி அமீது தன்னுடைய 75 வயதில் 20 ஆவது வங்காளதேச தேசிய பெண்கள் பட்டத்தை வென்றார். இப்போட்டி 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. தனது 34 வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கிய இவர் 1985 ஆம் ஆண்டு தனது நாட்டின் முதலாவது பிடே பெண் பன்னாட்டு மாசுட்டர் தலைப்புக்கு தகுதியானவராய் உயர்ந்தார். அந்த நேரத்தில், இவர் ஏற்கனவே தனது முதல் தேசிய வெற்றியாளர் கோப்பையை 1979 ஆம் ஆண்டு வென்றிருந்தார். 1984 ஆம் ஆண்டு முதல் ராணி அமீது அனைத்து உலக சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளிலும் விளையாடினார். இவற்றில் மூன்று முறை பொது அணியில் விளையாடியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு வங்கதேச நாட்டின் மண்டல வெற்றியாளராக ராணி இருந்தார். உருசியாவில் நடைபெற்ற 2018 உலகக் கோப்பை போட்டியின் போது "பத்திரிகையாளர்கள் தேர்வு விருதை" இவர் வென்றார். புது தில்லியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய சதுரங்கப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1959 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளையாட்டு அமைப்பாளராக இருந்த படைவீரர் கர்னல் எம்.ஏ. அமீதை இவர் திருமணம் செய்து கொண்டார்.[5] அவர்களின் மகன் கைசர் அமீது முகமதியன் விளையாட்டுச் சங்கத்தில் கால்பந்து வீரராக இருந்தார். 1980 மற்றும் 1990 ஆம் ஆன்டுகளில் வங்கதேச கால்பந்து அணியின் தலைவராகவும் கைசர் இருந்தார். இவரது மற்றொரு மகன், சோகல் அமீது தேசிய சுவர்ப்பந்து வெற்றியாளராக இருந்தார்.[6] இளைய மகன், பாபி அமீது முன்னாள் தேசிய எறி பந்து வீரராவார். இதைத் தவிர முதல் பிரிவு கால்பந்து வீரராகவும் இருந்தார். இவரது மகள் இயபீன் அமீது எப்போதும் விளையாட்டு ஆர்வலராகவும், விளையாட்டு குடும்பத்திற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Twitter, International Chess Federation". mobile.twitter.com. September 28, 2019.
- ↑ "About Sports and Games". Bangladesh Sangbad Sangstha. Archived from the original on 28 May 2012.
- ↑ 3.0 3.1 "John Saunders's Chess Pages: British Chess Champions, 1904 to present". www.saund.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
- ↑ 4.0 4.1 "Chess Queen Rani Hamid: Deserves a place in Guinness". The Financial Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
- ↑ "Noted sportsman MA Hamid dies at 76". https://bdnews24.com/bangladesh/2008/07/25/noted-sportsman-ma-hamid-dies-at-76.
- ↑ "Rani Hamid — Anand’s cheer girl from Dhaka". http://www.thehindu.com/sport/other-sports/rani-hamid-anands-cheer-girl-from-dhaka/article5348129.ece.
புற இணைப்புகள்
தொகு- Rani Hamid </img>
- Rani Hamid
- ஒலிம்பேசு