ராணி பவசங்கரி

ராணி பவசங்கரி (Maharani Bhavashankari) வங்காளத்தின் பூர்சூட் நகரை தலைமை இடமாக கொண்டு பூர்சூட் இராச்சியத்தை ஆண்ட அரசி ஆவார். இவரது ஆட்சி காலத்தில் பூர்சூட் இராச்சியம் கிழக்கு இந்தியாவின் வலிமை மிக்க, செழிப்பான மற்றும் சிறந்த இந்து இராச்சியமாக விளங்கியது.[1][2] மேலும் இவர் ஒடிசாவின் லோஹானி பதான் சுல்தான்களை தோற்கடித்தவர்.

பவசங்கரி
பூர்சூட் இராச்சியத்தின் அரசி
அரசாட்சி
ஆட்சிக்காலம்17 ஆம் நூற்றாண்டு
முடிசூட்டுதல்17 ஆம் நூற்றாண்டு
முன்னையவர்ருத்திரநாராயணன்
பின்னையவர்பிரதாபநாராயணன்
கணவர்ருத்திரநாராயணன்
மரபுபரத்வாஜ் வம்சம் (திருமணத்திற்கு பின்)
தந்தைதினநாத் சவுத்தரி

இளமை பருவம்

தொகு

ராணி பவசங்கரி வங்காளத்தை சேர்ந்த ஒரு குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.[3] இவரது தந்தை தினநாத் சவுத்தரி ஓர் சிறந்த போர் வீரர் ஆவார். இவர் நல்ல உயரமும், உடல் வாகும் பெற்ற தலைமை வீரர் ஆவார். இவர் தம் கட்டுபாட்டில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களை கொண்டு, அவர்களுக்கு போர் புரியும் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். தினநாத் சவுத்தரி பூர்சூட் இராச்சியத்தின் மதிப்பு மிக்க தலைமை போர் வீரர் ஆவார். தினநாத் சவுத்தரி தம்பதிகளுக்கு மூத்த மகளாக பவசங்கரி பெந்தோ கோட்டையில் பிறந்தார். பவசங்கரியின் தாயார் தமது இரண்டாவது பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து பின் இறந்தார்.

தனது இளய சகோதரர் தம் வளர்ப்பு தாயினால் வளர்க்கப்பட்டார். பவசங்கரி தனது தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது தந்தையின் மூலம் குதிரை ஏற்றம், வாள்வீச்சு மற்றும் வில்வித்தை முதலிய போர் பயிற்சிகளை கற்று தேர்ந்தார். ஒரு போர் வீரரைப் போல போர் உடை அணிந்து தனது தந்தையுடன் குதிரை சவாரி செய்தார். பவசங்கரி பூர்சூட் இராச்சியத்தின் துணிச்சலான இளம் போர் வீரரைப் போல் வளர்ந்தார். பின்னர் இவர் போர் நுட்பங்கள், இராஜதந்திரம், அரசியல், சமூகவியல், தத்துவம் மற்றும் இறையியல் ஆகியவற்றில் கற்று தேர்ந்தார்.

திருமணம்

தொகு
 
பவசங்கரி ஒரே ஈட்டி வீச்சால் காட்டெருமைகளை தாக்குதல்.

துணிச்சல் மிக்க இளம் பவசங்கரி வழக்கமாக தாமோதர் நதி பாயும் காட்டு பகுதியில் மான்களை வேட்டையாட செல்வார். ஒருமுறை வேட்டைக்கு செல்கையில் காட்டெருமைகள் அவரை தாக்கியது. அப்போது பவசங்கரி ஒரே ஈட்டி வீச்சால் காட்டெருமைகளை தாக்கி கொன்றார். அந்த சமயத்தில் பூர்சூட் இராச்சியத்தின் மன்னர் ருத்திரநாராயணன் தாமோதர் வழியாக தமது படைகளுடன் சென்று கொண்டிருந்தார். காட்டெருமைகளை ஒரு இளம் பெண் ஈட்டியால் கொன்ற காட்சி அவரை கவர்ந்தது. ருத்திரநாராயணனுக்கும் பவசங்கரிக்கும் இடையிலான திருமணத்தை அரச குலக்குரு ஹரிதேவ் பட்டாச்சாரியார் நிச்சயித்தார். பவசங்கரி ஆரம்பத்தில் தன்னை யார் ஒருவர் வாள் சண்டையில் போட்டியிட்டு வெற்றி பெருகிறாரோ அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்தார்.[4]

ஆனால், ஒரு சாதாரண பெண் ஒரு நாட்டின் அரசருடன் வாள் சண்டையில் ஈடுபட முடியாததால் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே இதன் பரிகாரமாக இருவரும் சேர்ந்து பூர்சூட் இராச்சியத்தின் குலதெய்வம் மற்றும் காவல் தெய்வமாக கருதப்படும் தெய்வமான ராஜபல்லவி தேவிக்கு முன்னால் பெரிய கொம்புகள் கொண்ட ஒரு இணை நீர் எருமைகள் மற்றும் ஒரு செம்மறியாட்டை பலியிட வேண்டும் என்று முடிவு செய்தனர். ராஜ்பால்ஹத் என இந்த பழைய தலைநகருக்கு இந்து தெய்வம் ராஜபல்லவி தேவியின் பெயரிடப்பட்டது.

ஆட்சிக்காலம்

தொகு

திருமணத்திற்கு பின் அரசர் ருத்திரநாராயணன் மற்றும் அரசி பவசங்கரி தாமோதர் நதிக்கரையில் ஒரு புதிய அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். ஒரு அரசியாக தனது அரசரின் ஆட்சி பணியில் உதவி வந்தார் மேலும் தேசத்தின் போர் படைகளை நிர்வகிக்க சிறப்பு கவணம் செலுத்தி வந்தார். இவர் தொடர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்களை சந்திப்பது, தமது படை திறன்களை மேம்படுத்துதல், நவீனமயமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது என திறம்பட செயல்பட்டு வந்தார். ராணி பவசங்கரி ஒவ்வொரு வீரரையும் போர் நுட்பங்களை கற்று தேற ஊக்குவித்தார். படிப்படியாக போர் பயிற்சிகளை கட்டாயமாக்கினார். இராச்சியத்தின் எல்லைகளில் பல புதிய கோட்டைகளை உருவாக்கினார். பழைய கோட்டைகளை சீரமைத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ghosh, Paschimbanger Sanskriti, Volume II, pp. 224
  2. Ghosh, Anil Chandra. বীরত্বে বাঙালী [Heroism of the Bengalis] (in Bengali) (9th ed.). Kolkata: Presidency Library. pp. 48–50.
  3. Raybaghini o Bhurishrestha Rajkahini
  4. Kundu, Ashok Kumar (1 October 2009). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Kolkata: Anandabazar Patrika இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091022075819/http://www.anandabazar.com/travel/2009/october/pujo-rajbolhut.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_பவசங்கரி&oldid=3269923" இலிருந்து மீள்விக்கப்பட்டது