பூர்சூட் இராச்சியம்

பூர்சூட் இராச்சியம் (Bhurshut) (வங்காள: ভুরশুট அல்லது பூரசுதா இராச்சியம், தற்கால இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களை உள்ளடக்கிய சிறு இராச்சியம் ஆகும். [1] இவ்விராச்சியத்தின் தலைநகர் பூர்சூட் நகரம் ஆகும்.

பூர்சூட் இராச்சியம்
15 -–18-ஆம் நூற்றாண்டு
தற்கால மேற்கு வங்காளத்தில் புர்சூட் இராச்சியம்
தலைநகரம் பூர்சூட்
மொழி(கள்) வங்காளம்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
அதிபர் சிவநாராயணன்
ருத்திரநாராயணன்
பவசங்கரி
பிரதாபநாராயணன்
பூரிசிரேஸ்த நாராயணன்
இலக்குமிநாராயணன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 -  உருவாக்கம் 15 -
 -  குலைவு 18-ஆம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள்  இந்தியா
Warning: Value not specified for "common_name"|- style="font-size: 85%;" Warning: Value specified for "continent" does not comply

கி பி 15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு முடிய பூர்சூட் இராச்சியத்தை பிராமண குடும்பத்தினர் ஆண்டனர்.[2]

முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில், பூர்சூட் இராச்சியத்தை கிருஷ்ணராய் எனும் மன்னர் (1583-1584) ஆண்டார். பூர்சூட் இராச்சியத்தின் புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணராயின் பேரன் பிரதாபநாராயணன் (1652–1684) ஆவார்.

பூர்சூட் இராச்சியத்தில் பவானிபூர், வசந்தபூர் மற்றும் ராஜ்பால்ஹத் எனுமிடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததாக அறியப்பட்டாலும், ஹவுரா மாவட்டத்தில், தாமோதர் ஆற்றின் கரையில், ராஜ்பால்ஹத் எனுமிடத்தில் திஹி பூர்சூட் எனுமிடம் உள்ளது. [2]

பூர்சூட் இராச்சியம், வர்தமான்ராஜ் எனும் கீர்த்திசந்த் என்பவரால் 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது.[2]

பூர்சூட் இராச்சியத்தின் மன்னர்கள்தொகு

  • சிவநாராயணன்
  • ருத்திரநாராயணன்
  • பவசங்கரி
  • பிரதாபநாராயணன்
  • பூரிசிரேஸ்தா நாராயனன்
  • இலக்குமி நாராயணன்

இதனையும் காண்கதொகு

பிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல்

மேற்கோள்கள்தொகு

  1. Ānandamūrti -The awakening of women - Page 303 1995 "Today we colloquially call it Bhurshut. The capital Garh Mandaram was ... In Bhurshut, the Mughal rulers had tremendous influence. Burdwan, in Bhurshut, was the capital of Bengal a number of times. [Some say] the word "Burdwan" came from"
  2. 2.0 2.1 2.2 Ghosh, Binoy, Paschim Banger Sanskriti, (in Bengali), part II, 1976 edition, pp. 218-234, Prakash Bhaban

வெளி இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 22°46′N 88°02′E / 22.76°N 88.04°E / 22.76; 88.04

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்சூட்_இராச்சியம்&oldid=3269673" இருந்து மீள்விக்கப்பட்டது