ராணி பாத்தியானி

ராணி பாத்தியானி சா ஒரு இந்து பெண் தெய்வம் ஆவார். மேற்கு ராஜஸ்தான், இந்தியா மற்றும் கிப்ரோ, பாகிஸ்தான் நாட்டின் காஷ்மோர் சிந்து பகுதியில் வசிக்கும் மக்களால் இந்த பெண் தெய்வம் வணங்கப்பட்டு வருகிறார். [1]

மாதா ராணி பாத்தியானி சா

வழிபாடு தொகு

ராணி பாத்தியானி தெய்வத்தின் பிரதான கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தின் ஜசோல் மற்றும் ஜோதிகாஸ் ஜெய்சால்மர் (மஜிசாவின் பிறப்பிடமாக) இங்கு அவர் புவாசா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் குறிப்பாக பார்து ராஜபுத்திர வம்சத்தின் வழி வந்த தோலி சமூக மக்களால் வணங்கப்பட்டு வருகிறார். தோலி (பாடகர்) சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அவரது நினைவாக கூமர் பாடல்களைப் பாடுகிறார்கள் [2], அங்கு அவர் ஜெய்சால்மரின் இளவரசி என்று புகழப்படுகிறார். [3] தெய்வம் தனது முதல் தரிசனத்தை ஒரு தோலி சமூகத்தைச் சோ்ந்த நாருக்க கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தெய்வம் மஜீசா (தாய்) என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் அவரது நினைவாக துதிப் பாடல்கள் பார்து இனத்தைச் சோ்ந்த மக்களால் பாடப்படுகின்றன.

புனிதக் கோவில் தொகு

இராஜஸ்தானில் அமைந்துள்ள மாதா ராணி பாத்தியானி கோவில் அப்பகுதியின் புகழ்வாய்ந்த உள்ளூர் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார். அங்கு புதிதாக கட்டப்பட்ட கோயில் ஜெய்சால்மர் கல்லால் நிர்மானிக்கப் பட்டள்ளது. இது கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பாலோத்ரா மற்றும் நகோடா இடையேயான ஒரு கிராமமான ஜசோலில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.போலோத்ரா ரயில் நிலையத்திலிருந்து தானி, மற்றும் மகிழுந்துகள் மூலம் இக்கோவிக்குச் செல்லலாம்.[4]

வரலாறு தொகு

ராணி பாத்தியானியின் மகன் ஸ்வரூப் . ஒரு சிறிய இராச்சியமான ஜோகிதாஸ் ஜெய்சால்மர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபுத்திர இளவரசியான அவா் பாத்தியானி என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை ஜோக்ராஜ்சிங்ஜி பதி ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் . ரத்தோர் இளவரசர் (ஜசோல்) கல்யாண் சிங்கை மணந்ததாகப் புராணங்களின் பல்வேறு கதைகள் உள்ளன. இந்த திருமணம் அவரது மரணத்திற்கு வழிவகுப்பதாக அமைந்தது. ஒரு பதிப்பில், கல்யாண் சிங்கின் பொறாமை கொண்ட முதல் மனைவி தேவ்ரி என்பவள் பாத்தியானியின் மகன் லால் சிங்குக்கு விஷம் கொடுத்ததாகவும் மற்றொரு பதிப்பில் அவரது கணவர் போரில் கொல்லப்பட்டார் என்ற செய்தி தன்னை அடைந்தது, இருப்பினும் உண்மையில் அவரது மைத்துனர் சவாய் சிங் இறந்திருக்க அவளை விடுவித்து இரண்டாவது மனைவியை அடைவதற்காக கணவரே இந்த வதந்தியை பரப்பினார். இருப்பினும் தனது கணவர் உயிருடன் இருப்பதாக தெரிய வந்தது என்றாலும், இறந்த தனது மைத்துனரின் ஈமச்சடங்கு சிதையில் குதித்து அப்போது நிலவி வந்த சதி உடன் கட்டை ஏறுதல் வழக்கத்தை பின்பற்றி மரணத்தை தழுவினார்.. பாட்டியானியின் மரணம் காரணமாக கல்யாண் சிங்கின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சிக்கலால் அவரது ஆவியை சமாதானப்படுத்தும் விதமாக ஜசோலில் அவருக்காக ஒரு சன்னதி அர்ப்பணிக்கப்பட்டது; அதன்பிறகு அார் ஒரு புனிதப் பெண் தெய்வமாக மாறியதாகக் கூறப்படுகிறது. [5] [6] [7]

2020 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் தார்பர்கர் மாவட்டத்தில் ராணி பாத்தியானிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில் சில சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டது. மேலும் அவர்கள் ராணி பாத்தியானியின் சிலையை சூறையாடி புனித நூல்களுக்கு தீ வைத்தனர். [8]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_பாத்தியானி&oldid=3797365" இலிருந்து மீள்விக்கப்பட்டது