ராதா யாதவ்
ராதா பிரகாஷ் யாதவ் (Radha Prakash Yadav (பிறப்பு:ஏப்ரல் 21 ,2000) இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார்.[1] இவர் மும்பை, பரோடா மற்றும் மேற்கு இந்தியா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் 4 முதல் தரத் துடுப்பாட்டம், 13 பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் 16 பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.[2] இவர் சனவரி 10, 2015 இல் கேரள மாநில துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் உள்ளூர்த் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் மும்பையிலுள்ள கண்டிவலியில் (மேற்கு) பிறந்தார்.[4] இவரின் தந்தை பழவியாபாரி ஆவார். இவரின் கடைக்குப் பின்னால் 225 சதுரடி உள்ள வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர்.[4] இவர் சிறுவயதில் அங்குள்ள ஆண்குழந்தைகளிடன் இணைந்து துடுப்பாட்டம் விளையாடத் துவங்கியுள்ளார். பின் இவரின் பயிற்சியாளர் இவருக்கு 12 வயதாக இருக்கும் போது இவரின் திறமையை அறிந்து இவருக்கு பயிற்சி வழங்கினார். பின் 2013இல் போரிவலி சென்றார்.[5] தற்போது இவர் வித்யா குஞ்ச் பள்ளியில் கல்விகற்கிறார்.[6]
துடுப்பாட்ட வாழ்க்கை
தொகுபெப்ரவரி 13, 2018 இல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[7]
2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி பெண்கள் பன்னாட்டு இருபது20 உலகக்கோப்பைத் தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது.[8][9] அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 8 இலக்குகளை வீழ்த்தி அதிக இலக்குகளை வீழ்த்திவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[10]
சான்றுகள்
தொகு
- ↑ "ராதா யாதவ்-". கிரிக் அர்சிவ்.
- ↑ Statistics
- ↑ Mumbai vs Kerala
- ↑ 4.0 4.1 "Radha Yadav, Mumbai Vegetable Vendor's Daughter Becomes India Cricketer".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "RADHA YADAV".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Radha Yadav followed her first coach to Vadodara".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "1st T20I, India Women tour of South Africa at Potchefstroom, Feb 13 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
- ↑ "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
- ↑ "ICC Women's World T20, 2018/19 - India Women: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.