ராபர்ட் எட்வர்ட்சு

ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards, செப்டம்பர் 27, 1925-ஏப்ரல் 10, 2013), பிரித்தானிய[1] உயிரியலாளரும் சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் முன்னோடியும் ஆவார். மருத்துவர் பாட்ரிக் ஸ்டெப்டோவுடன் (1913 – 1988) இணைந்து இவர் நடத்திய ஆய்வுகள் 1978 ஆம் ஆண்டில் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்க வழிவகுத்தது[2][3]. இவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது[4]. இவர் ஏப்பிரல் 10, 2013இல் இறந்தார்.[5]

ராபர்ட் எட்வர்ட்சு
பிறப்பு27 செப்டம்பர் 1925 (1925-09-27) (அகவை 99)
மான்செஸ்டர்
இறப்பு10 ஏப்பிரல் 2013
இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வேல்சு பல்கலைக்கழகம்
எடின்பரோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுreproductive medicine
in-vitro fertilization
விருதுகள்மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2010)

முதல் சோதனைக் குழாய்க் குழந்தை

தொகு

ராபர்ட் எட்வர்ட்சு 1960களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை சூலை 25, 1978இல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது.

அந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.[6]

ராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

எனினும், கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் வகுத்த இயற்கைச் சட்டத்தை மதிக்காமல் செயற்கைமுறையில் கருத்தரிக்க மனிதர் முனைவது அறநெறிக்கு எதிரானது என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. மேலும், ஒரு கருத்தரிப்பு வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் அதற்குத் தயாரிப்பாக வேறுபல கருக்களையும் உருவாக்கவேண்டும், பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படாத பல கருக்கள் சோதனைக் கூடத்தில் பாதுகாக்கப்படவேண்டும், பயன்படுத்தப்படாத கருக்கள் அழிக்கப்பட நேரிடும். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது.[7] அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.

ராபர்ட் எட்வர்ட்சு இறப்பு

தொகு

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ராபர்ட் எட்வர்ட்சு ஏப்பிரல் 10, 2013இல் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. ""Robert G. Edwards - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "1978: First 'test tube baby' born". BBC. 1978-07-25. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/25/newsid_2499000/2499411.stm. பார்த்த நாள்: 2009-06-13. "The birth of the world's first "test tube baby" has been announced in Manchester (England). Louise Brown was born shortly before midnight in Oldham and District General Hospital" 
  3. Moreton, Cole (2007-01-14). "World's first test-tube baby Louise Brown has a child of her own". London: Independent. http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/worlds-first-testtube-baby-louise-brown-has-a-child-of-her-own-432080.html. பார்த்த நாள்: 2010-05-22. "The 28-year-old, whose pioneering conception by in-vitro fertilisation made her famous around the world ... The fertility specialists Patrick Steptoe and Bob Edwards became the first to successfully carry out IVF by extracting an egg, impregnating it with sperm and planting the resulting embryo back into the mother." 
  4. "The 2010 Nobel Prize in Physiology or Medicine - Press Release". Nobelprize.org. 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-04.
  5. எட்வர்ட்சு இறப்பு
  6. []http://www.reuters.com/article/2013/04/10/us-ivf-edwards-idUSBRE9390IE20130410 பரணிடப்பட்டது 2013-04-11 at the வந்தவழி இயந்திரம் அறிவியல் கண்டுபிடிப்பு]
  7. செயற்கைக் கருத்தரிப்புக்கு வத்திக்கான் எதிர்ப்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_எட்வர்ட்சு&oldid=3591480" இலிருந்து மீள்விக்கப்பட்டது