ராபர்ட் சிசோம்

ராபர்ட் பெல்லோவ்ஸ் சீஷோம் (Robert Chisholm) (11 ஜனவரி 1840 – 28 மே 1915) ஒரு ஆங்கிலேய கட்டிடகலை நிபுனர்.அவர் சென்னையில் கட்டிடக்கலையின் இந்தோ-சாராசனிக் பாணியில் முன்னோடியாக திகழ்ந்தார்.

ராபர்ட் சிசோம்
பிறப்பு11 சனவரி 1840
இறப்பு28 மே 1915 (அகவை 75)
பணிகட்டடக் கலைஞர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சீஷோம் 11 ஜனவரி 1840ல் லண்டன் நகரில் பிறந்தார் (ஆங்கிலேய கட்டிடக் கலைஞர்களின் ராயல் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி 3 நவம்பர் 1838 அன்று பிறந்தார்). மற்றும் ஆங்கிலேய ஐக்கிய இராச்சியத்தில் அவரது இளமைக் கல்வி இருந்தது, தனது இளம் வயதில் லண்டனில் ஒரு திறமையான கட்டுகாணப்பணி ஓவியராக திகழ்ந்தார். அவரது கல்வி நிறைவடையும்போது, அவர் இந்தியாவின் கொல்கத்தா சென்றார், மற்றும் 1865 ஆம் ஆண்டின் சென்னை வந்தார், அங்கு அவர் செய்தொழிற்சித்திரம் பள்ளி தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொழில்

தொகு

1865 இல் சீஷோம் சென்னை பிரசிடென்சி கல்லூரியின் பழைய கட்டடத்தை வடிவமைப்பதற்குக் தொடங்கினார். அவர் துவக்கத்தில் ரிணைசன்ஸ் மற்றும் கோதிக் வகைகளில் கட்டிடங்கள் வடிவமைத்தார்.[1] மேலும் 1865–67 அவர் இல் உதகமண்டலம் நீல்கிரி நூலகத்தை கட்டமைத்தார் (1869 ஆம் ஆண்டு முடிவடைந்தது), அதே நகரத்தில் (1865–69) லாரன்ஸ் நினைவு பள்ளி வடிவமைத்திருந்ததார். சேப்பாக்கம் கலச மஹால் வளாகத்தில் வருவாய் பலகை கட்டிடம், 1871 இல் சீஷோமால் கட்டப்பட்டது.[2] இதுவே இந்தோ-சரசெனிக் அல்லது இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் வடிவமைத்த முதல் கட்டிடமாக இருந்தது.[3][4] சீஷோம் பின்னர் கட்டிடக்கலையின் இந்தோ-சரசெனிக் பாணியில் ஒரு முன்னோடியாக உருவானார்.[5][6]

மேலும் சீஷோமால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பின்வருமாறு.

லாரன்ஸ் அசைலம் கட்டிடங்கள் (1865),

நேப்பியர் அருங்காட்சியகம் திருவனந்தபுரம்[7], பிரசிடென்சி கல்லூரி சென்னை (1865–70), சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடங்கள் (1874–79),[5][6][8] பி ஆர் & சன்ஸ் அலுவலகங்கள்[9] மற்றும் உதகமண்டலம் உள்ள அஞ்சலகம் மற்றும் மின்-அஞ்சல் அலுவலகம் (1875–83).

மேலும் விரிவாக்கப்பட்ட எம் ஏ சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் ஒரு பெவிலியன் சீஷோமால் கட்டப்பட்டது. [10] சீஷோம் 1872 இல் சென்னை அரசு கட்டிடக்கலை ஆலோசகராக நியமிக்கப்பட்டு 1872 முதல் 1886 வரை பணியாற்றினார்.[11] 1880–90 போது அவர் மும்பை முனிசிப்பல் அலுவலகங்கள் மற்றும் பரோடா (வதோதரா) அளப்பரிய லட்சுமி விலாஸ் அரண்மனை பொறுப்பாக இருந்தார். அவர் 1902ல் லண்டன் திரும்பினார், அவரது பிரபலமடைந்த லண்டன் கடகன் ஹால் கட்டிடம் ஸ்லோன் சதுக்கத்தில் அருகில் கட்டமைத்தார். அவராலேயே செல்சியா கிறிஸ்துவின் விஞ்ஞான திருச்சபை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இறப்பு

தொகு

சீஷோம் சுமார் 75 வயதில் பெருநகரம் சௌதசீயில் 28 மே 1915 அன்று இயற்கை எய்தினார்.

குறிப்புகள்

தொகு
  1. K. Placzek, Adolf (1982). Macmillan encyclopedia of architects, Volume 1. Free Press. p. 415. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0029250005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-925000-6.
  2. Muthiah, pp 166-168
  3. Chopra, Preeti (2011). A Joint Enterprise: Indian Elites and the Making of British Bombay. University of Minnesota Press. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816670374, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-7037-6.
  4. Morley, Ian (2008). British provincial civic design and the building of late-Victorian and Edwardian cities, 1880–1914. Edwin Mellen Press. p. 278.
  5. 5.0 5.1 Abram, David; Edwards, Nick (2003). The Rough Guide to South India. Rough Guides. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843531038, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-103-6.
  6. 6.0 6.1 Jeyaraj, George J. "Indo-Saracenic Architecture in Chennai" (PDF). Chennai Metropolitan Development Authority.
  7. Anand, G. (30 September 2011). "Museum band stand mayecho martial music again". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/article2499934.ece. 
  8. Muthiah, S. (3 September 2006). "Magnificience Restored". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071230002541/http://www.hindu.com/mag/2006/09/03/stories/2006090300180200.htm. 
  9. முத்தையா, p 62 (ஆங்கில மொழியில்)
  10. Muthiah, p 170
  11. Muthiah, p 155

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_சிசோம்&oldid=3766032" இலிருந்து மீள்விக்கப்பட்டது