ராபர்ட் பிலிப்சன்

ராபர்ட் ஹென்றி லாரன்ஸ் பிலிப்சன் (Robert Henry Lawrence Phillipson) 1942 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள் இசுக்கொட்லாந்து நகரில் பிறந்தார்.[1] இவர் கோபன்ஹேகன் பள்ளியில் ஆங்கில ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலைப் படிப்பை நிறைவுசெய்த பிலிப்சன் முனைவர் பட்டத்தை ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் பயின்றார். ராபர்ட் தன்னுடைய மொழி சார்ந்த வல்லாண்மை எனும் புத்தகத்தில் மேற்கத்திய நாடுகள், குடியேற்ற நாடுகள் மற்றும் முன்னாள் குடியேற்ற நாடுகளிடமும் ஆதிக்கம் செலுத்த ஆங்கில மொழியை ஓர் அதிகார கருவியாக பயன்படுத்தின என வாதிடுகிறார். மேலும் ஆங்கில மொழியில் பரப்பப்பட்ட சித்தாந்தங்களையும் ஆராய்ச்சி செய்தார். 2010 ல் பிப்ரவரி 21 ஆம் நாள் லிங்காபாக்ஸ் ( Linguapax) பரிசை வென்றார்.[2] இவரது மொழி ஏகாதிபத்தியம் நூலுக்காக இவர் மிகவும் அறியப்படுகிறார்

ராபர்ட் பிலிப்சன்

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_பிலிப்சன்&oldid=3600872" இலிருந்து மீள்விக்கப்பட்டது