ராமச்சந்திரன் ரமேஷ்
ராமச்சந்திரன் ரமேஷ் (ஆங்கில மொழி Ramachandran Ramesh) (பிறப்பு; 20 ஏப்ரல் 1976). என்பவர் இந்தியாவின் சதுரங்க கிராண்டுமாஸ்டர் ஆவார். இவர் 2002 பிரித்தானிய சாம்பியன்ஷிப் மற்றும் 2007 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஆவார்.
இவா் பெண் கிராண்டு மாசுட்டர் ஆர்த்தி ராமசாமியை திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் தான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் தம்பதியா் ஆவா்.[1]
இவர் 2008 ஆம் ஆண்டு இளம் சதுரங்க வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக சென்னையில் செஸ் குருகுலம் என்னும் செஸ் அகாடமியைத் தொடங்கினார். இந்த சதுரங்க குருகுலம் தற்போது இந்தியாவிலிருந்து கார்த்திகேயன் முரளி, பிரஞ்ஞானந்தா, வைஷாலி, அரவிந்த் சிதம்பரம் உட்பட பல சர்வதேச சதுரங்க சாம்பியன்களை உருவாக்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Relatives of Chessplayers". Archived from the original on 2009-10-26. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.