ராம்கி சீனிவாசன்


ராம்கி (இராமகிருஷ்ணன்) சீனிவாசன் (ஏப்ரல் 3, 1972 -- திசம்பர் 19, 2022) ஒரு வனவுயிரிப் புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் ஒரு தொழில் முனைவராகவும் துளிர் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். அமூர் வல்லூறுகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க அவர் எடுத்த முன்னெடுப்புகள் காரணமாக நாகாலாந்தில் அப்பறவைகள் வேட்டையாடப்படுவது தடை செய்யப்பட்டது[1].

முதன்மைப் பணிகள் தொகு

பறவைப் புகைப்படக் கலைஞராக பெரிதும் அறியப்பட்டு இருப்பினும், ராம்கி வனவுயிரிகளின் காப்பு தொடர்பான பணிகளே முதன்மையானவை என்று கருதினார். சேகர் தத்தாத்ரியுடன் இணைந்து அவர் தொடங்கிய கன்சர்வேஷன் இந்தியா என்ற இணையவழி மேடையின் மூலம் 25 வனவுயிர் காப்புச் செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. கண் புற்றுநோயின் ஒரு வடிவமான ரெட்டினோபிளாஸ்டோமாவால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் வைல்டுலைப் பார் கான்சர் என்ற நிறுவனத்தைத் துவக்கினார்[2].

படிப்பு தொகு

பள்ளிப் படிப்பை வித்யா மந்திரிலும் இயற்பியல் பட்டப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் மேலாண்மை மேற்படிப்பை எசு. பி. செயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பெற்றார்.

தொழில் முனைவு தொகு

இன்டெர்செப்டு டெக்னாலசீசு என்ற இணையவழி விளம்பர நிறுவனத்தைத் துவக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். மார்க்கெடிக்சு என்ற சந்தைப்படுத்துதல் பகுப்பாய்வு நிறுவனத்தைத் தொடங்கி அதனை நிருவகித்தார். வில்டர்மார்ட் என்ற இணையவழி பலசரக்குக் கடைக்கான ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Wildlife Photographer Ramki Sreenivasan Death Reason, Biography, Age, Wife, Education". https://thesportsgrail.com/. பார்க்கப்பட்ட நாள் 02-சூலை-2023. {{cite web}}: Check date values in: |access-date= (help); External link in |website= (help)
  2. "வைல்டுலைப் பார் கான்சர்". பார்க்கப்பட்ட நாள் 02-சூலை-2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்கி_சீனிவாசன்&oldid=3749030" இலிருந்து மீள்விக்கப்பட்டது