ராம் கிருபாள் யாதவ்

பீகாரை சேர்ந்த அரசியல்வாதி

ராம் கிரிபால் யாதவ் (Ram Kripal Yadav)(பிறப்பு: அக்டோபர் 12, 1957) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகாரில் உள்ள பாடலிபுத்ரா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 17வது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகவும், லாலு யாதவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.[3][4][5] பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6][7][8] இவர் முதலில் பீகாரில் பாட்னா மாநகர தந்தையாகவும், பின்னர் 2014 முதல் 2019 வரை மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.[9][10]

ராம் கிருபால் யாதவ்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
பின்னவர்நிரஞ்சன் ஜோதி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ரஞ்சன் பிரசாத் யாதவ்
தொகுதிபாடலிபுத்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய ஜனதா தளம் (2014 வரை)
துணைவர்கிரண் தேவி
பிள்ளைகள்3
வாழிடம்பட்னா
முன்னாள் கல்லூரிமகது பல்கலைக்கழகம் இளங்கலை, இளங்கலைச் சட்டம்

கல்வி

தொகு

யாதவ் 12 நவம்பர் 1957-ல் பிறந்தார். இவர் பாட்னாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் இளங்கலை சட்டப் பட்டங்களைப் பெற்றார்.[11]

பதவிகள்

தொகு
  • 1985-1986 :- துணை மேயர், பாட்னா மாநகராட்சி
  • 1992-1993 :- உறுப்பினர், பீகார் சட்ட மேலவை
  • 1993-1996 :- 10வது மக்களவைக்கு தேர்வு (இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்)
  • 1996-1997 :- 11வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (2வது முறை)
  • 1998-2004 :- உறுப்பினர், பீகார் சட்ட மேலவை
  • 1998-2005 :- தலைவர், பீகார் தர்மிக் நயாஸ் பரிஷத் (பீகார் அரசின் மாநில அமைச்சருக்கு இணையான பதவி)
  • 2004-2009 :- 14வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (3வது முறை)
  • உறுப்பினர், தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு
  • உறுப்பினர், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குழு
  • 5 ஆகஸ்ட் 2007 :- உறுப்பினர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மீதான நிலைக்குழு
  • 1 மே 2008 :- உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு
  • 2010 - 16 மே 2014 :- மாநிலங்களவைக்கு தேர்வு
  • 2010 :- உறுப்பினர், பாதுகாப்புக் குழு
  • 2010 :- உறுப்பினர், நிலக்கரி அமைச்சகம் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு
  • தலைவர் :- டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மற்றும் கலாச்சார நிறுவனம், பீகார்
  • 2014-2019 :- 16வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (4வது முறை)
  • 14 ஆகஸ்ட் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், மதிப்பீடுகளுக்கான குழு
  • 1 செப்டம்பர் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் மீதான நிலைக்குழு
  • 1 செப்டம்பர் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், ஆலோசனைக் குழு, ரயில்வே அமைச்சகம்
  • 9 நவம்பர் 2014 - 5 ஜூலை 2016 :- மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் இணை அமைச்சர்[12]
  • 5 ஜூலை 2016 - 25 மே 2019 :- மத்திய ஊரகத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர்[13]
  • மே 2019 :- 17வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (5வது முறை)[14]
  • 24 ஜூலை 2019 முதல் :- உறுப்பினர், பொதுக் கணக்குக் குழு
  • 13 செப்டம்பர் 2019 முதல் :- உறுப்பினர், விவசாய நிலைக்குழு
  • 9 அக்டோபர் 2019 முதல் :- உறுப்பினர், துணைச் சட்டத்திற்கான குழு
  • 9 அக்டோபர் 2019 முதல் :- உறுப்பினர், ஆலோசனைக் குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சான்றுகள்

தொகு
  1. "Pataliputra Election result 2019: RJD's Misa Bharti trailed as BJP's Ram Kripal Yadav won by 39321 votes". Times Now News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  2. "Lok Sabha elections 2019: Misa Bharti vs Ram Kripal Yadav in Pataliputra". The Telegraph (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
  3. "Lalu Prasad loyalist Ram Kripal Yadav joins BJP". India.Com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  4. "All you need to know about Ram Kripal Yadav, the former Lalu loyalist". Firstpost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  5. "Ram Kripal Yadav - Lalu's disciple now PM Narendra Modi loyalist". Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-11-09.
  6. "Rebel RJD MP Ram Kripal Yadav joins BJP". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  7. "Ram Kripal Yadav joins BJP". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  8. "Ram Kripal Yadav joins BJP". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  9. "Ram Kripal Yadav MP demands government to set up new industries in Bihar". Etv Bharat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  10. "Lok Sabha Election 2019: सुबह-सुबह राजधानी की सड़कों पर ई-रिक्शा चलाते दिखे केंद्रीय मंत्री, लोग देखकर रह गए दंग". Jansatta (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  11. "Yadav, Shri Ram Kripal". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
  12. "Union minister Ram Kripal Yadav drives e-rickshaw, leaves". Business Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  13. "Union minister Ram Kripal Yadav drives e-rickshaw, leaves Patna residents bemused". News Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  14. "Seventeenth Lok Sabha Members Bioprofile". Lok Sabha (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_கிருபாள்_யாதவ்&oldid=3694084" இலிருந்து மீள்விக்கப்பட்டது