ரிசால் (Rizal) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் அன்டிபொலோ ஆகும். இது 1901 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 188 கிராமங்களும், 13 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரெபெசா ஏ. ய்ன்ராஸ் (Rebecca A. Ynares ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,191.94 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ரிசால் மாகாணத்தின் சனத்தொகை 1,191.94 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 73ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 5ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 99% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர். ரிசால் மாகாணத்தில் வாழும் மக்களில் 80 வீதமான மக்கள் ரோமன் கத்தோலிக்க சமயத்தப் பின்பற்றுகின்றனர்.

ரிசால்
மாகாணம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கலபர்சொன்
நேர வலயம்ஒசநே+8 (PHT)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசால்&oldid=3483669" இலிருந்து மீள்விக்கப்பட்டது