ரிச்சர்ட் இந்திரேகோ
ரிச்சர்ட் இண்ட்ரெகோ (Richard Indreko) எசுத்தோனிய நாட்டின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1900ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி புர்டி பாரிசு, சார்வாமா, புயாடு என்னும் இடத்தில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி, சுவீடன் தலைநகர் சுடாக்கோமில் இறந்தார்.[1] இவர் பண்டைய எசுடோனிய வரலாற்றில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1923ஆம் ஆண்டு முதல் 1927ஆம் ஆண்டு வரை டார்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1933ஆம் ஆண்டு விரிவுரையாளரானார். 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை குந்தா (குந்தா கலாச்சாரம்) அருகிலுள்ள லாம்மாசுமாகி மற்றும் சாரேமாவின் அசுவாவில் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவர் பின்னோ-உக்ரிய மக்களின் தோற்றம் மற்றும் குடியேற்றப் பகுதி பற்றிய முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.[2]
1941ஆம் ஆண்டு "எசுடோனியாவில் கற்காலம்" ("கெசுக்மைன் கிவியாக் ஈசுடிசு") என்ற ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டார். 1943ஆம் ஆண்டு இவர் பின்லாந்துக்கு தப்பிச் சென்று ஒரு வருடம் கழித்து சுவீடனில் குடியேறினார். 1961ஆம் ஆண்டு சுடாக்கோமில் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு 1962ஆம் ஆண்டு, இவரது எசுடோனியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்ற நூல் வெளியானது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nurk, Ragnar (2005). "Richard Indreko teooria soomeugrilaste etnogeneesist" (in Estonian). p. 5. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ www.kirj.ee
- ↑ Open Library