ரிச்சர்ட் மேக்கிலிவ்ரே டாக்கின்ஸ்

பிரித்தானிய தொல்லியலாளர்

ரிச்சர்ட் மேக்கிலிவ்ரே டாக்கின்ஸ் ( Richard MacGillivray Dawkins ) (24 அக்டோபர் 1871 - 4 மே 1955) ஒரு பிரித்தானிய தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். [1] [2] 1906 மற்றும் 1913 க்கு இடையில் இவர் ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியுடன் தொடர்புடையவர் [3]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், இங்கிலாந்து அரச கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய இசுடோக் கேப்ரியல், அவரது மனைவி மேரி லூயிசா மெக்கிலிவ்ரே ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மார்ல்பரோ கல்லூரியிலும், இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார், அங்கு இவர் மின் பொறியாளராகப் பயிற்சி பெற்றார்.

கல்வி வாழ்க்கை தொகு

இவர் பலேகாஸ்ட்ரோ, [4] அகழ்வாராய்ச்சி மற்றும் லகோனியா [5] , ரிட்சோனா ஆகிய இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பங்கேற்றார். [6] 1909 முதல் 1911 வரை கப்படோசியாவில் மொழியியல் களப்பணியை மேற்கொண்டார். இதன் விளைவாக கப்படோசியன் கிரேக்கம் பற்றிய அடிப்படை பணி கிடைத்தது. பின்னர் 1911 ஆம் ஆண்டு முதல் பிலகோபியில் ஒரு அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார் [7]

கேம்பிரிட்ச்சிலுள்ள இம்மானுவேல் கல்லூரியின் சக மாணவராக இருந்தார். 1906 முதல் 1913 வரை ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியின் இயக்குநராக இருந்தார். [8] முதல் உலகப் போரின் போது, கிரீட்டில் உள்ள அரச கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். [9] டிசம்பர் 1919 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பைசநதியம் மற்றும் நவீன கிரேக்க மொழி மற்றும் இலக்கியத்தின் முதல் பைவாட்டர் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 மற்றும் 1930 க்கு இடையில் நாட்டுப்புறக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். மேலும் தனது பிற்கால வாழ்க்கையில் கிரேக்க நாட்டுப்புறக் கதைகளின் கணிசமான மூன்று தொகுப்புகளை வெளியிட்டார். [9]

1907 ஆம் ஆண்டில், தனது உறவினரிடமிருந்து பிளாஸ் துலாஸ் தோட்டத்தை பெற்றார். அங்கு தாவர இறக்குமதியிலும் சாகுபடியிலும் பரிசோதனை செய்தார். தோட்டத்திற்குள் தொல்ல்லியல் பொருட்களையும் காட்சிப்படுத்தினார். [10]

பணிகள் தொகு

  • Modern Greek in Asia Minor (1916)
  • The sanctuary of Artemis Orthia at Sparta (1929)
  • The Cypriot Chronicle of Makhairas (1932)
  • The Monks of Athos (1936)
  • Forty-five Stories from the Dodecanese (1950)
  • Arabian Nights
  • Norman Douglas (G. Orioli, 1933 [Lungarno series], revised 1952)
  • Modern Greek Folktales (1953)
  • More Greek Folktales (1955)
  • More stories from the Arabian Nights (1957)

சான்றுகள் தொகு

  1. Professor R. M. Dawkins The Living Greek Tradition (Obituaries) The Times Friday, May 06, 1955; pg. 13; Issue 53213; col E
  2. Prof. R. M. Dawkins (Obituaries) The Times Wednesday, May 18, 1955; pg. 13; Issue 53223; col D
  3. "Directors of the British School at Athens". Swansea University. Archived from the original on 1 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  5. "Mani - History - 1821 to present".
  6. Ronald M. Burrows and Percy N. Ure in Boeotia. by Dr. Victoria Sabetai, Academy of Athens. A lecture given at the Ure Museum of Greek Archaeology, 2006. Archived here.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  8. "Modern Greek at Oxford". The Times (42281): p. 18. 12 December 1919. 
  9. 9.0 9.1 Halliday, W. R. (1955-06-01). "Obituary R. M. Dawkins, 1871–1955". Folklore 66 (2): 299–301. doi:10.1080/0015587X.1955.9717476. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-587X. https://doi.org/10.1080/0015587X.1955.9717476. 
  10. "History of Plas Dulas Estate". Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
ஆதாரங்கள்
  • R. J. H. Jenkins, Richard MacGillivray Dawkins, 1871-1955, Proceedings of the British Academy, 41 (1955), 373–88.

வெளி இணைப்புகள் தொகு