ரிட்டிகலை மலை

ரிட்டிகலை மலை இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் 40 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் (2513 அடி) உயரமான மலையாகும். வடமத்திய மாகாணத்தின் உயரத்தில் கூடிய மலைமுகட்டைக் கொண்ட இம்மலைத்தொடர் 3 மைல் நீளமும் அதன் அகலம் கூடிய இடத்தில் 2 மைல் அகலத்தையும் கொண்டது. இம்மலை செறிவான காட்டினால் மூடப்பட்டுள்ளதோடு இக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உட்பட பல விலங்குகள் காணப்படுகின்றன. மலையில் மேற்பகுதிகளில் பல அறிய தாவரங்கள் காணப்படுகின்றன. மல்வத்து ஆற்றின் நீரேந்துப் பகுதியாக இம்மலை காணப்படுகிறது.[1] [2]

மேற்கோள்கள் தொகு

  1. Perera, Deepal V. (13 நவம்பர் 1996). "Ritigala: Hanuman's piece from the Himalayas". Midweek Mirror. பார்க்கப்பட்ட நாள் 2008-02-22.
  2. "Ritigala - mountain of mystery and mist". http://www.lankalibrary.com/. பார்க்கப்பட்ட நாள் 2008-02-22. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிட்டிகலை_மலை&oldid=1557736" இலிருந்து மீள்விக்கப்பட்டது