ரிதுபர்ணன்
மன்னர் இரிதுபர்ணன் (Rituparna) (சமக்கிருதம்: ऋतुपर्ण), கோசல நாட்டு மன்னர்.[1] தீயவர்களால் சூதாட்டத்தில் நாட்டை இழந்த நிசாத நாட்டு மன்னன் நளன், காட்டில் மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து, கோசல நாட்டின் மன்னர் இரிதுபர்ணனின் அயோத்தி அரண்மனையில் சமையற்காராக பணியில் அமர்கிறார்.[2][3] குதிரைகள் தொடர்பான அறிவியலை அறிந்த நளனைப் பற்றிய உண்மையை அறிந்த மன்னர் இரிதுபர்ணன், நளனிடம் குதிரை சாஸ்திரம் தொடர்பான மந்திரங்களைக் கற்றுக்கொள்கிறார். இந்நிலையில் தமயந்தி ஒருவாறாக தன் தாய் நாடான விதர்ப்ப நாட்டை அடைகிறாள். தமயந்தியின் ஆலோசனையின் பேரில் தமயந்திக்கு மீண்டும் சுயம்வரம் அறிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த மன்னர் இரிதுபர்ணன், நளனைக் கூட்டுக் கொண்டு விதர்ப்ப நாட்டை அடைந்தார். சுயம்வர சபையில் தமயந்தி ஒருவாறாக நளனை கண்டறிந்து நளனின் கழுத்தில் மாலையிடுகிறாள். மன்னர் இரிதுபர்ணன் தலைமையில் மீண்டும் நளன்-தமயந்திக்கு திருமணம் நடைபெறுகிறது.[4]
ரிதுபரணன் | |
---|---|
நூல்கள் | மகாபாரதம் |
சமயம் | அயோத்தி, கோசல நாடு |
அரசமரபு | இச்வாகு வம்சம், சூரிய குலம் |
மகாபாரதம் இதிகாசத்தின் வன பருவத்தில், நளன்-தமயந்தியின் வேதனை மிகு கதை தருமருக்கு சொல்லப்படுகிறது.[5] இக்கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன. ஸ்ரீஹர்ஷரின் நைஷதம் என்னும் வடமொழி நூலும், புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும், அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Brodbeck, Simon (2019). Krishna's Lineage: The Harivamsha of Vyasa's Mahabharata (in ஆங்கிலம்). Oxford University Press. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-027917-2.
- ↑ Patel, Deven M. (2014-01-07). Text to Tradition: The Naisadhiyacarita and Literary Community in South Asia (in ஆங்கிலம்). Columbia University Press. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-16680-5.
- ↑ Dowson, John (2013-11-05). A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History and Literature (in ஆங்கிலம்). Routledge. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-39029-6.
- ↑ Mani, Vettam (2015-01-01). Puranic Encyclopedia: A Comprehensive Work with Special Reference to the Epic and Puranic Literature (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 654. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0597-2.
- ↑ நளனை அறிந்த ரிதுபர்ணன்! - வனபர்வம் பகுதி 77