ரியோ டி ஜெனிரோ தாவரவியல் பூங்கா
இரியோ டி செனீரோ தாவரவியல் பூங்கா (Rio de Janeiro Botanical Garden) அல்லது ஜார்டிம் பொட்டானிகோ இரியோ டி செனீரோவின் "சோனோசுல்" தென் மண்டலத்தில் உள்ள ஜார்டிம் பொட்டானிக்கோ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Instituto de Pesquisas Jardim Botânico do Rio de Janeiro | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | June 13, 1808 |
தலைமையகம் | இரியோ டி செனீரோ, பிரேசில் 22°58′03″S 43°13′26″W / 22.96750°S 43.22389°W |
மூல அமைப்பு | சுற்றுச்சூழல் அமைச்சகம் (பிரேசில்) |
வலைத்தளம் | www |
இந்தத் தாவரவியல் பூங்கா, பிரேசிலிய, வெளிநாட்டு தாவரங்களின் பன்முகத் தன்மையைக் காட்டுகிறது. 54 எக்டேர் பரப்பளவில் இங்கே சுமார் 6,500 தாவரஇனங்கள் (சில அழிந்து வருபவை உட்பட) பரவிக்கிடக்கின்றன. மேலும் இங்கே பல பசுமை இல்லங்களும் உள்ளன. இந்த பூங்காவில் வரலாறு, கலை, தொல்பொருள் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள முக்கியமான ஆராய்ச்சி மையத்தில் 32,000 எண்ணிக்கைக்கும் அதிகமான தொகுதிகளுடன் தாவரவியல் நிபுணத்துவம் வாய்ந்த, அந்த நாட்டிலேயே மிக சிறந்த, நூலகம் ஒன்று உள்ளது.
இது போர்ச்சுகலின் போர்த்துக்கலின் ஆறாம் யோவான் என்ற அரசரால் 1808 இல் நிறுவப்பட்டது. முதலில் மேற்கிந்திய தீபகற்பத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜாதிக்காய், மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் 1822 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக இந்த தோட்டம் திறக்கப்பட்டது, தற்போது டிசம்பர் 25, ஜனவரி 1 தவிர, ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் திறக்கப்படுகிறது.
140 எக்டேர் பரப்பளவுள்ள இப்பூங்கா 'கோர்கோவாடோ' மலை அடிவாரத்தில் மீட்பரான கிறிஸ்து (சிலை)க்கு வலதுபுறமாக கீழே அமைந்துள்ளது, இங்கு 900 வகையான பனை மரங்கள் உட்பட 6,000 க்கும் அதிகமான வெப்பமண்டல, துணை வெப்பமண்டல தாவரவகைகளும் மரங்களும் உள்ளன.
நுழைவாயிலிலிருந்து பூங்காவிற்கு செல்லும்போது 750 மீட்டர் நீளமுள்ள 134 பனை மரங்கள் ஓரங்களில் அழகாக அமைந்துள்ளதைக் காணலாம். இந்த மரங்கள் அனைத்தும் நெடுங்காலத்திற்கு முன் மின்னலால் அழிப்பட்ட ஒரே தாய்மரத்திலிருந்துதான் தோன்றியுள்ளன. பூங்காவின் சுமார் 40% பகுதி மட்டுமே பயிரிடப்படுகிறது, மீதமுள்ள பகுதி அட்லாண்டிக் காடாகவும் 'கோர்கோவாடோ' மலைச் சரிவாகவும் உள்ளது. இந்த பூங்கா தேசிய மரபு கலை, வரலாற்று நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகிறது, மேலும் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ஓர் உயிர்க்கோள இடமாகக் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தாவரவியல் பூங்காவில் பிரேசிலில் அதிகளவில் தாவரவியல் ஆய்வுகளை உருவாக்கும் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் இருக்கிறது. இப்பூங்காவில் புது வகை வெப்பமண்டலத்தாவரங்களைக் கண்டறிந்து பாதுகாக்ககூடிய தொகுப்புமுறையியல் வ்ல்லுனர்கள் உள்ளனர்.
புரோமேலியாட் மலா்கள், ஆர்கிட் வகை தாவரங்கள், ஊனுண்ணிச் செடிகள், கள்ளிச்செடிகள் ஆகியவை இப்பூங்காவின் தொகுப்புக்களுள் அடங்கும். இதில் பிரேசிலின் மிகப்பெரிய தாவரவியல் நூலகமும் உலர்ந்த பழங்களும், அரிய பிரேசிலிய தாவரங்களும் பல புகைப்படங்களும் உள்ளன.
மேலும், மனிதர்களுக்கு பழக்கமாகி, அதனால் காடுகளில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் எளிதாக மனிதர்களால் உற்றுநோக்கப்படக்கூடிய 140 வகையான பறவைகள் இந்த பூங்காவில் உள்ளன. இவற்றுள் இரட்டை அலகு துக்கான் பறவை, கிண்ணிக்கோழி மற்றும் [[வெள்ளை -கழுத்து பருந்து]] ஆகியவை அடங்கும். கபூசின் வகை முகமூடிக் குரங்குகளும் குடும்பி உள்ள சிறிய குரங்குகளும் அடிக்கடி இந்த தாவரவியல் பூங்காவில் காணப்படுகின்றன.
இந்த பூங்காவில் ஆர்வமூட்டுவனவாக ஒரு பழைய வெடி மருந்து தொழிற்சாலை, இலேகா ஃரை இலியண்டிரோ குளத்தில் உள்ள விக்டோரியா லில்லி மலர்கள், ஜப்பானிய தோட்டம், பல சிற்பங்கள், நீரூற்றுகள் ஆகியனவும் உள்ளன.
படத்தொகுப்பு
தொகு-
1856 ல் தாவரவியல் பூங்கா
-
1882 இல் வில்லியம் பெல் என்பவரின் ஆய்வுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட படம்
-
மே 1925ஈல் ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் வருகை
-
பாா்வையாளா் மையம்
-
பனை மரங்களுக்கு நடுவில் நடைபாதை.
-
மியூசசு நீரூற்று
-
குளிா் காலத்தில் மீட்பர் கிறிஸ்து சிலையிலிருந்து பூங்காவின் தோற்றம்.
-
விக்டோாியா லில்லி மலா்கள்]
-
புலன்சாா் பூங்கா
-
கள்ளித் தோட்டம்
-
பூங்காவிலிருந்து கோர்கோவாடோ மலை, மீட்பரான கிறிஸ்து (சிலை)தோற்றம்
-
துறவி இலியாண்ட்ரோ தோவின் நினைவிடம்
-
பூங்காவின் முதல் இயக்குநா் - துறவி இலியாண்ட்ரோ தோவின் மாா்பளவு சிலை
-
பூங்காவை தோற்றுவித்த போர்ச்சுகல் அரசா் ஜான்
-
காா்ல் கிளாசில் குகை
-
அமேசோன் பகுதி மீனவா் குளம்
-
சூாியக் கடிகாரம்
-
ஜப்பானியத் தோட்டம்
-
நிா்வாக கட்டிடம்
-
நடைபாதை
-
பூங்கா நடைபாதை, அமா்வு பலகை.
-
புரோமேலியாட் மலா்கள்