ரிவர்சைடு ஆய்வுக்கூட 1985 கண்காணிப்புச் சோதனை

ரிவர்சைடு ஆய்வுக்கூட 1985 கண்காணிப்புச் சோதனை (ஆங்கிலம்: University of California, Riverside 1985 laboratory raid) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு (UCR) க்குச் சொந்தமான ஒரு ஆய்வகத்தில் 1985-ல் சட்டத்துறையால் நடத்தப்பட்ட ஒரு திடீர் கண்காணிப்புச் சோதனை ஆகும். இக்கண்காணிப்புச் சோதனையின் விளைவாக அங்கிருந்து விலங்கு விடுதலை முன்னணி (ALF) அமைப்பினரால் குரங்கு ஒன்று விடுவிக்கப்பட்டது. பிரிட்ச்ஸ் (பிறப்பு: மார்ச் 1985) என்று அழைக்கப்படும் இந்த குரங்கானது, UCR-ல் இனப்பெருக்கக் கிடங்கில் பிறந்த ஒரு ஸ்டம்ப்-டெயில் மக்காக் (Macaca arctoides) வகைக் குரங்கு ஆகும். பிறந்த உடனேயே தனது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, கண் இமைகள் அறுவை சிகிச்சை மூலம் தைத்து மூடப்பட்டு, தலையில் சோனிக்கைட் எனப்படும் குருட்டுப் பயண வழிகாட்டிச் சாதனத்தின் பரிசோதனை வடிவமான டிரைசென்சர் எய்ட் என்ற எலக்ட்ரானிக் சோனார் சாதனம் பொருத்தப்பட்டது. புலன்கள் நீக்கப்பட்ட 24 குரங்குக் குட்டிகளைக் கொண்டு மூன்று ஆண்டுகள் நடத்தத் திட்டமிடப்பட்ட அறிவியல் ஆய்வின் ஒரு பகுதியாக பிரிட்ச்ஸ் குரங்கு இவ்வாறு தயார்படுத்தப்பட்டது.[1] உணர்மாற்று சாதனம் பொருத்தப்பட்டு வளர்க்கப்படும் குரங்குகளின் நடத்தை மற்றும் நரம்பியல் வளர்ச்சியை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தப் பரிசோதனைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.[2][3]

ரிவர்சைடு ஆய்வுக்கூட 1985 கண்காணிப்புச் சோதனை
BritchesALF-cropped.jpg
அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிரிட்ச்ஸ் குரங்குக் குட்டி
நாள்ஏப்ரல் 20, 1985
நிகழிடம்கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு
Participantsவிலங்கு விடுதலை முன்னணி (ALF)
சொத்து நாசம்$700,000 (பல்கலைக்கழகக் கணக்கின் படி)

ஒரு மாணவர் அளித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடந்த இந்த திடீர் கண்காணிப்புச் சோதனையில், விலங்கு விடுதலை முன்னணி அமைப்பு பிறந்து ஐந்து வாரங்களே ஆன பிரிட்ச்ஸ்சை ஏப்ரல் 20, 1985 அன்று ஆய்வகத்தில் இருந்து விடுவித்தது.[4][5] இந்தக் கண்காணிப்புச் சோதனையில் மேலும் 467 எலிகள், பூனைகள், ஓபோஸம்கள், புறாக்கள், முயல்கள் உள்ளிட்ட விலங்குகளும் விடுவிக்கப்பட்டன. மேலும் $700,000 மதிப்புள்ள உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[6] பல்கலைக்கழக ஆய்வகத்தில் விலங்குகள் முறைகேடாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் இந்தக் கண்காணிப்புச் சோதனையானது அப்பல்கலைக்கழகத்தின் நீண்டகால ஆராய்ச்சித் திட்டங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.[7]

தாங்கள் நடத்திய கண்காணிப்புச் சோதனையின் காணொளியினை விலங்கு விடுதலை முன்னணி அமைப்பானது சக விலங்குரிமை அமைப்பான பீட்டாவிடம் ஒப்படைக்க, அது அக்காணொளியை பொதுமக்களது கவனத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆவ் ஹெல்த் (National Institutes of Health [NIH]) அமைப்பானது அப்பல்கலைக்கழகத்தில் விலங்குப் பராமரிப்புத் திட்டம் குறித்து எட்டு மாத காலம் விசாரணை நடத்தி அந்த அறிவியல் பரிசோதனையின் பொருந்து தன்மையை ஊறுதி செய்து அத்திட்டத்தில் சரி செய்யவேண்டியது ஏதுமில்லை என்றும் தனது முடிவினை அறிவித்தது.[8]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள் தரவுகள் தொகு

  1. See Newkirk, Ingrid. Free the Animals, Lantern Books, 2000, pp. 271–294; "Abstract: Trisensor rearing with infant macaques" பரணிடப்பட்டது 2008-12-06 at the வந்தவழி இயந்திரம், Crisp; and Behav Neurosci. 1987 Oct;101(5):738-41.
  2. Behav Neurosci. 1987 Oct;101(5):738-41: "The ability of neonate macaque monkeys to learn to respond to artificial spatial sensory information was studied through the use of compact, head-worn, electronic spatial sonars with audible displays, which translate spatial information into auditory dimensions specifying distance, direction, and surface characteristics. Three animals were born in the dark and raised without vision for 1 to 3 months while wearing either the Binaural Sensory Aid (Animal 1; Kay, 1974) or the Trisensor (Animals 2 and 3; Easton & Jackson, 1983) airborne sonars. Each animal demonstrated alertness to information transmitted by the devices in spontaneous reaching or reinforced discrimination tasks, and more device-related, perceptual-motor activities were observed when the sensors were switched on than when they were switched off. The results show that neonate monkeys can learn effective use of information obtained from sensory substitution devices through unstructured interaction with the environment.
  3. Seeing with Sound
  4. "The Story of Britches", film produced by PETA using the ALF footage, Google video, accessed 11 March 2010.
  5. Phelps, Norm. The Longest Struggle: Animal Advocacy from Pythagoras to PETA. Lantern Books, 2007, p. 292.
  6. Franklin, Ben A. " Going to Extremes for 'Animal Rights'", The New York Times, August 30, 1987.
  7. "Group Says It 'Rescued' 260 Animals From Lab," Associated Press, April 21, 1985.
  8. Holden, Constance. "A pivotal year for lab animal welfare", Science 11 April 1986 232:249

மேலும் படிக்க தொகு

  • "Britches tribute website". Archived from the original on 24 July 2015.
  • Warren, David H. and Strelow, Edward R. Electronic Spatial Sensing for the Blind. Proceedings of the NATO Advanced Research Workshop on Visual Spatial Prosthesis for the Blind. Held at Lake Arrowhead, California, September 10–13, 1984. Springer, 1985.
  • Khan, Ali Yousaf Ali. "Angels of Mercy", Channel 4, June 24, 2006; includes footage of Britches.
  • Mann, Keith. From Dawn 'Til Dusk. Puppy Pincher Press, 2007; features Britches on the front cover.
  • "NIH Reauthorization and Protection of Health Facilities: Hearings before the Subcommittee on Health and the Environment of the Committee on Energy and Commerce," Washington 1991.
  • "Pro-Animal ALF Flouts Law in Name of Compassion," Sacramento Bee, February 15, 1998.
  • Philadelphia Inquirer, p. A10, April 22, 1985.