ருக்மிணி வர்மா

ருக்மிணி வர்மா (Rukmini Varma) (பிறப்பு 1940) பெங்களூரைச் சேர்ந்த இவர் ஓர் இந்தியக் கலைஞராவார்.

ருக்மணி வர்மா
பிறப்புபரணி திருநாள் இருக்மிணி பாய்
1940
திருவிதாங்கூர்
தேசியம்இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மவுன்ட் கார்மெல் கல்லூரி, பெங்களூர்

வாழ்க்கை தொகு

திருவிதாங்கூரின் உத்திரம் திருநாள் லலிதாம்பா பாயி மற்றும் சிறீகேரள வர்மா கோயில் தம்புரான் ஆகியோருக்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருக்கு இட்ட பெயர் பரணி திருநாள் இருக்மிணி பாயி என்பதாகும். இவர் மகாராணி சேது லட்சுமி பாயியின் பேத்தியும், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவருமாவார். [1] புகழ்பெற்றக் கலைஞர் ராஜா ரவி வர்மா இவரது பெரிய தாத்தா ஆவார். இவரது தந்தை கேரள வர்மா கரி மற்றும் கரிக்கோல் ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கலைஞராக இருந்தார். இவரது மகன் ஜெய்கோபால் வர்மாவும் ஒரு வண்ணக் கரிக்கோல் கலைஞராவார்.

1970 களில் இவர் பெங்களூரின் சித்ரகலா பரிசத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். தற்போது இவர் 2015 செப்டம்பரில் நிறுவிய பெங்களூரில் உள்ள ராஜா ரவி வர்மா பாரம்பரிய அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். [2]

ருக்மிணி வர்மா எழுத்தாளர் சிறீகுமார் வர்மாவின் உறவினராவார். மறைந்த தேவி பிரசாத் வர்மாவை மணந்த இவருக்கு வேணுகோபால் வர்மா, ஜெய்கோபால் வர்மா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது சகோதரர் பாலகோபால் வர்மா திருவிதாங்கூரைச் சேர்ந்த இளையராஜா என்ற பட்டத்தை தற்போது வைத்துள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. Travancore State Manual Vol II by Velu Pillai, 1940
  2. The Raja Ravi Varma Heritage Foundation
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மிணி_வர்மா&oldid=3005753" இலிருந்து மீள்விக்கப்பட்டது