ரேவதி திருநாள் பாலகோபால வர்மன்
ரேவதி திருநாள் பாலகோபால வர்மன் (Revathi Thirunal Balagopal Varma ) இளவரசி உத்திரம் திருநாள் லலிதாம்பா பாயி (1923-2008), உத்திரட்டாதி திருநாள் கேரள வர்ம கோயில் தம்புரான் ஆகியோரின் மகனான 1953இல் திருவிதங்கூரின் இளையராஜாவாகப் பிறந்தார். இவர், திருவிதாங்கூரின் கடைசி அரசப் பிரதிநியான பத்மநாபசேவினி மகாராணி பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயியின் பேரனாவார். [1] மேலும், புகழ்பெற்ற கலைஞரான ராஜா ரவி வர்மாவின் பெரிய பேரனும், ருக்மணி வர்மனின் சகோதரரும் ஆவார். எழுத்தாளரான சிறீகுமார் வர்மா இவரது உறவினராவார்.
ரேவதி திருநாள் பாலகோபால வர்மன் | |
---|---|
திருவிதாங்கூரின் இளையராஜா பட்டம் மட்டும் (மன்னராட்சி ஒழிக்கப்பட்டது) | |
பிறப்பு | 1953 சூலை பெங்களூர் |
மரபு | வேணாடு சொரூபம் குலசேகர வம்சம் |
தந்தை | கிளிமானூர் அரண்மனையைச் சேர்ந்த உத்திரட்டாதி திருநாள் கேரள வர்ம கோயில் தம்புரான் |
தாய் | இளவரசி உத்திரம் திருநாள் லலிதாம்பா பாயி |
மதம் | இந்து சமயம் |
திரிப்பாப்பூர் கிளையின் தலைவரான மூலம் திருநாள் ராம வர்மாவுக்கு அடுத்ததாக ரேவதி திருநாள் இருக்கிறார். [2] திருவிதாங்கூர் அரசக் குடும்பம் புகழ்பெற்ற சிறீ பத்மநாபசாமி கோயிலின் பாதுகாவலர்கள் ஆவர். பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், பின்னர், பெர்க்லியிலுள்ள் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்ற இவர், 1970களில் குடும்பத் தொழில்களை மேற்கொள்வதற்கு முன்பு முதுநிலை வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். [3] வித்யா என்பவரை மணந்த இவருக்கு சம்யுக்தா என்ற மகளும், விக்ரமாதித்யன் என்ற மகனும் உள்ளனர்.