சிறீகுமார் வர்மா
ஸ்ரீகுமார் வர்மா (Shreekumar Varma) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், செய்தித்தாள் கட்டுரையாளரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர், லேமென்ட் ஆஃப் மோகினி (பெங்குயின், 2000), மரியா`ஸ் ரூம் (ஹார்பர் காலின்ஸ், 2010) மற்றும் கிப்ளிங்ஸ் டாட்டர் (ஆங்கிலோஇங்க், 2018), குழந்தைகள் புத்தகமான டெவில்ஸ் கார்டன் : டேல்ஸ் ஆஃப் பப்புடோம் (பஃபின், 2006), தி மேஜிக் ஸ்டோர் ஆஃப் நு-சாம்-வு (பஃபின், 2009), பழசி ராஜா: தி ராயல் ரெபெல் (மேக்மில்லன், 1997) போன்ற புதினங்களுக்காக நன்கு அறியப்படுகிறார். [1] மேலும் இவர் எழுதிய நாடகங்கள், பைவ் அன்ட் அதர்ஸ் பிளே, மிட்நைட் ஹோட்டல் &அன்ட் அதர்ஸ் பிளே, (தலா மூன்று நாடகங்களின் தொகுப்புகள், இரண்டுமே ஆதிசக்ரித் வெளியிட்டது, 2019) என்பதாகும்.
சிறீகுமார் வர்மா | |
---|---|
பிறப்பு | 1955 (அகவை 68–69) சேட்டல்மந்த் அரண்மனை, பூஜாபுரா, திருவனந்தபுரம் |
பணி | எழுத்தாளார், கவிஞர், ஆசிரியர் |
வலைத்தளம் | |
http://www.shreevarma.com |
சுயசரிதை
தொகுஇவர் 1955 இல் திருவனந்தபுரத்தின் பூஜாபுராவின் சேட்டல்மந்து அரண்மனையில் பிறந்தார். இவரது நான்கு வயதில், இவரது பெற்றோர் கேரளாவை விட்டு வெளியேறி சென்னையில் குடியேறினர். இவர் குட் ஷெப்பர்ட் கான்வென்ட், [2] சென்னை கிறுத்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி], சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். அங்கிருந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும் தத்துவத்தில் முனைவர் பட்டத்தினையும் முடித்தார். பவன் இதழியல் கல்லூரியில் இதழியலும், பொதுஜனத் தொடர்பில் ஒரு பாடத்தையும் செய்தார். பள்ளி நாடகங்களிலும் கல்லூரியில் நாடகங்களிலும் பங்கேற்ற இவர், அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். முமபையில் இந்தியன் எக்ஸ்பிரசு மற்றும் திரைத்துறை இதழில் (சினிமா டுடே என பெயர் மாற்றப்பட்டது) பணியாற்றினார். மீண்டும் சென்னையில், அவர் ட்ரைடென்ட் என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் வெளியிட்டார். மேலும் ஒரு அச்சகமும் ஒரு வெளியீட்டு படைப்பு பயிற்சி பிரிவுடன் தொடர்பிலிருந்தார். பின்னர், சென்னை கிருந்த்துவக் கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பத்திரிகையும் கற்பித்தார். 13 ஆண்டுகளாக சென்னை கணிதவியல் கழகத்த்தில் ஆங்கிலம் கற்பித்தார். இவர் ஒரு பட்டய உறுப்பினராகவும், சென்னை தென்மேற்கு அரிமா சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவரது தாயார், மறைந்த கார்த்திகை திருநாள் இந்திரா பாய் (1926-2017), திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவரது தந்தை, மறைந்த கிளிமானூர் கேரள வர்மா, ஒரு வழக்கறிஞரும், தொழிலதிபரும், கவிஞரும், நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளருமாவார். மேலும் இவர், திருவிதாங்கூரின் கடைசி ஆளும் மகாராணி, சேது லட்சுமி பாய், கலைஞர் ராஜா ரவி வர்மா ஆகியோரின் பேரனும் ஆவார். இவர், மூலம் திருநாள் ராம வர்மா, ரேவதி திருநாள் பாலகோபால் வர்மா ஆகியோருக்குப் பிறகு திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஆவார்.
இவர் தனது மனைவி கீதாவுடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் முழுநேர எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு விநாயக் வர்மா, கார்த்திக் வர்மா என்ற இரண்டு மகன்களும், உள்ளனர். இவர் கலைஞர் ருக்மிணி வர்மாவின் உறவினராவார்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Shreekumar Varma". WorldCat.org. பார்க்கப்பட்ட நாள் 7 April 2010.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
வெளி இணைப்புகள்
தொகு- A Writer's World, Shreekumar Varma's Homepage
- The MetroPlus Show interview
- Doordarshan interview
- NDTV Hindu interview