ருசிகா கிருகோத்ரா வழக்கு
ருசிகா கிருகோத்ரா வழக்கு (Ruchika Girhotra case) 1990 இல் இந்தியாவின் ஹரியானாவில் காவல் துறை அதிகாரியான சம்பு, (SPS ரத்தோர்) 14 வயது ருசிகா கிருகோத்ராவை துன்புறுத்திய சம்பவத்தினைக் குறிக்கும் வழக்காகும். இந்தப் பெண், காவல் துறை அதிகாரிக்கு எதிராக புகார் அளித்த பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் துன்புறுத்தினர். 22 டிசம்பர் 2009 அன்று, 19 வருடங்கள், 40 ஒத்திவைப்புகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, நீதிமன்றம் இறுதியாக இந்திய தண்டனைச் சட்டம் 354 (துன்புறுத்தல்) பிரிவின் கீழ் ரத்தோரை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு ஆறு மாத சிறை மற்றும் ரூ .1000 அபராதம் விதித்தது. தண்டனையை எதிர்த்த அவரது மேல்முறையீடு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது, சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் மே 25 அன்று முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு முந்தையயதாக வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையினை அதிகரித்தது ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை என அறிவித்தது . உடனடியாக காவலில் எடுத்து புரைல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். [1] [2] 11 நவம்பர் 2010 அன்று, உச்ச நீதிமன்றம் எஸ்பிஎஸ் ரத்தோருக்கு சண்டிகரில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியது. அண்மையில், இந்திய உச்சநீதிமன்றம், ராத்தோர் மீதான வன்கொடுமை வழக்கில் தண்டனையை உறுதிசெய்தது, ஆனால் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை ஆறு மாதமாக குறைத்து தண்டையினை உறுதி செய்தது.
பின்னணி
தொகுருசிகா கிருகோத்ரா சண்டிகரில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு (1991 தொகுதி) மாணவி ஆவார். அவரது தந்தை, எஸ்சி கிருகோத்ரா, யூகோ வங்கியில் மேலாளராக இருந்தார். இவருக்கு பத்து வயதாக இருந்தபோது அவருடைய அம்மா இறந்துவிட்டார். [3] [4] அவருக்கு ஆசு ஒரு சகோதரன் இருந்தார்.
ருசிகா, தனது நண்பர் ஆராதனா பிரகாசுடன், அரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனில் (HLTA) பயிற்சி பெறுவதற்காகச் சேர்ந்தார். [5]
காவல் துறை அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் ருசிகாவின் தந்தை மற்றும் சகோதரர் பல முறை துன்புறுத்தலுக்கு ஆளாகி பஞ்ச்குலாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர். ஆராதனாவின் பெற்றோர் ஆனந்த் மற்றும் மது பிரகாஷ் 400 க்கும் மேற்பட்ட விசாரணைகளில் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கஜ் பரத்வாஜ் மற்றும் மீட் மல்கோத்ரா 1996 முதல் இந்த வழக்கை எந்தத் தொகையும் பெறாமல் வாதாடினர். [5] [6]
அரியானா கேடரின் இந்திய காவல் பணி அதிகாரியான ரத்தோர், 1941 இல் பிறந்தார் மற்றும் 1966- பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக, கண்கானிப்பு காவலராக நியமிக்கப்பட்டார். அவர் அரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனின் நிறுவனத் தலைவராக இருந்தார், ரத்தோர் பஞ்ச்குலாவில் உள்ள தனது வீட்டின் பின்புறப் பகுதியினை அதன் அலுவலகமாகப் பயன்படுத்தினார். [7] இந்த வீட்டின் பின்னால் ஒரு களிமண் வரிப்பந்தாட்ட மைதானம் இருந்தது, இது அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் ஒரு சில இளம் பெண்கள் விளையாடினர். [5] உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கையினால் பின்னர் வரிப்பந்தாட்ட மைதானம் இறகுப் பந்தாட்ட மைதானமாக ஆனது.[8]
சான்றுகள்
தொகு- ↑ Ruchika Girhotra Case: Molestation of Minor, Abuse of Power. The Times of India.
- ↑ Ruchika Case: Women's Association Upset With Verdict. Ibnlive.in.com (23 December 2009).
- ↑ How her world came apart bit by bit..., ''The Tribune'', Chandigarh பரணிடப்பட்டது 2018-03-26 at the வந்தவழி இயந்திரம். The Tribune.
- ↑ Cops made Ruchika's nanny pose as mum?. The Times of India.
- ↑ 5.0 5.1 5.2 The Ruchika Girhotra Case. Hindustan Times.
- ↑ Baffling twists & turns helped Rathore, India Today. Indiatoday.intoday.in (4 January 2010).
- ↑ Rathore ‘abandoned’ by his buddies, Thaindian News பரணிடப்பட்டது 2018-03-26 at the வந்தவழி இயந்திரம். Thaindian.com.
- ↑ Molestor, Murderer, Rapist: Sector 6 has seen them all, Sindh Today[தொடர்பிழந்த இணைப்பு]. Sindhtoday.net.