ருடால்ப் அமெங்கா-எட்டெகோ
ருடால்ப் அமெங்கா-எட்டெகோ (Rudolf Amenga-Etego) மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கானாவில் நீர் விநியோகத்தை மலிவு விலையில் வைத்திருப்பதற்கும், கானாவில் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2004 ஆம் ஆண்டில் எட்டெகோவிற்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]. கிட்டத்தட்ட கானாவில் 70 சதவீதம் மக்கள் தூய்மையான நீர் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். கானா நாடு முழுவதும் உள்ள நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்த கானா அரசாங்கத்திற்கு கடன்களை வழங்கும் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவையே எட்டெகோ எதிர்த்து போராடிய முக்கிய அமைப்புகளாகும். ஏனெனில் இந்த கடன்கள் நீர் வழங்கல் செயல்முறையை தனியார்மயமாக்கலுக்கு ஆதரவாக இருந்தன.
ருடால்ப் அமெங்கா-எட்டெகோ Rudolf Amenga-Etego | |
---|---|
தேசியம் | கானா நாட்டவர் |
பணி | வழக்கறிஞர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2004) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Africa 2004. Rudolf Amenga-Etego. Ghana. Environmental Policy. In 2016,Dec 8th, he was declared Member of Parliament-elect for Chiana Paga Constituency for the NDC". Goldman Environmental Prize. Archived from the original on 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 3 December 2010.