உருபீடியம் வெள்ளி அயோடைடு

(ருபீடியம் வெள்ளி அயோடைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருபீடியம் வெள்ளி அயோடைடு (Rubidium silver iodide) என்பது RbAg4I5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட முத்தனிமச் சேர்ம வகையாகும். வழக்கத்திற்கு மாறான திடப்பொருளாக விளங்கும் இம்முத்தனிமச் சேர்மத்தின் கடத்துத் திறன், வெள்ளி அயனிகள் படிக அணிக்கோவைக்கு உட்புறத்திலேயே நகர்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 146 0 வெப்பநிலையில் ஆல்ஃபா நிலை வெள்ளி அயோடைடு[1] பெற்றுள்ள அயனிக்கடத்தல் திறன் பண்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இப்பண்பு கண்டறியப்பட்டது.

விகிதவியல் அளவுகளில் ருபீடியம் அயோடைடு மற்றும் வெள்ளி(I) அயோடைடு சேர்மங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அவற்றை உருக்கியோ[2] அல்லது துகளாக அரைத்தோ[3] ருபீடியம் வெள்ளி அயோடைடைத் தயாரிக்கமுடியும். இதனுடைய மின்கடத்துகையின் அளவு ஒரு மீட்டருக்கு 25 சீமென் என்று அறியப்படுகிறது. அதாவது, 1×1×10 மி.மீ பார் (அளவை|பார்) அழுத்தத்தில் நீள் அச்சில் 400 ஓம்கள் மின்தடையைப் பெற்றிருக்கிறது.

நான்முக அயோடின்களின் தொகுப்பால் இதன் படிக அமைப்பு ஆக்கப்பட்டுள்ளது. வெள்ளி அயனிகள் உட்பரவுதலுக்கு ஏதுவாக இவற்றின் முகப்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன[4].

ருபீடியம் வெள்ளி அயோடைடு 1970 ஆம் ஆண்டில் மின்கலன்களுக்கான திண்ம மின்பகுளியாக பரிந்துரைக்கப்பட்டது. வெள்ளி மற்றும் ருபீடியம் அயோடைடு மின்முனைகள் இரண்டையும் இணைக்கும் இணையலாக இது பயன்படுத்தப்பட்டது[1].

ருபீடியம் வெள்ளி அயோடைடு குடும்பமானது பல சேர்மங்களால் ஆன குழு மற்றும் திண்மங்களின் கரைசல்களைக் கொண்டுள்ளது. இவை RbAg4I5 சேர்மத்துடன் ஆல்ஃபா நிலை மாறுபாடுகளுடன் சமபகுதிய அமைப்பைக் கொண்டுள்ளன. Ag+ மற்றும் Cu+ நேர்மின் அயனிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மீஉயர் அயனிக்கடத்திகளுக்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம் KAg4I5, NH4Ag4I5, K1−xCsxAg4I5, Rb1−xCsxAg4I5, CsAg4Br1−xI2+x, CsAg4ClBr2I2, CsAg4Cl3I2, RbCu4Cl3I2, KCu4I5 மற்றும் பல.[5][6][7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Smart, Lesley and Elaine A. Moore (2005). Solid State Chemistry: An Introduction. CRC Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-7516-1.
  2. Popov, A. S.; Kostandinov, I. Z.; Mateev, M. D.; Alexandrov, A. P.; Regel, Liia L.; Kostandinov; Mateev; Alexandrov; Regel (1990). "Phase analysis of RbAg4I5 crystals grown in microgravity". Microgravity Science and Technology 3: 41–43. Bibcode: 1990MiST....3...41P. 
  3. Peng H.; Machida N. Shigematsu T. (2002). "Mechano-chemical Synthesis of RbAg4I5 and KAg4I5 Crystals and Their Silver Ion Conducting Properties". Journal of the Japan Society of Powder and Powder Metallurgy 49 (2): 69–74. doi:10.2497/jjspm.49.69. http://sciencelinks.jp/j-east/article/200207/000020020702A0227545.php. பார்த்த நாள்: 2015-08-19. 
  4. Geller, S. (1967). "Crystal Structure of the Solid Electrolyte, RbAg4I5". Science 157 (3786): 310–312. doi:10.1126/science.157.3786.310. பப்மெட்:17734228. Bibcode: 1967Sci...157..310G. 
  5. Geller S., Akridge J.R., Wilber S.A. (1979). "Crystal structure and conductivity of the solid electrolyte α-RbCu4Cl3I2". Phys. Rev. B 19 (10): 5396–5402. doi:10.1103/PhysRevB.19.5396. Bibcode: 1979PhRvB..19.5396G. 
  6. Hull S. Keen D.A., Sivia D.S., Berastegui P. (2002). "Crystal Structures and Ionic Conductivities of Ternary Derivatives of the Silver and Copper Monohalides – I. Superionic Phases of Stoichiometry MAg4I5: RbAg4I5, KAg4I5, and KCu4I5". J.Solid State Chemistry 165 (2): 363–371. doi:10.1006/jssc.2002.9552. Bibcode: 2002JSSCh.165..363H. 
  7. Despotuli A.L., Zagorodnev V.N., Lichkova N.V., Minenkova N.A. (1989). "New high conductive CsAg4Br1−xI2+x (0.25 < x < 1) solid electrolytes". Sov. Phys. Solid State 31: 242–244. 
  8. Lichkova N.V., Despotuli A.L., Zagorodnev V.N., Minenkova N.A., Shahlevich K.V. (1989). "Ionic conductivity of solid electrolytes in the two- and three-components AgX–CsX (X = Cl, Br, I) glass-forming systems". Sov. Electrochem. 25: 1636–1640.