உருய் உலோபேசு டி வில்லலோபோசு

(ருய் லோப்பசு டி விலியாலோபோசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருய் லோபேசு டி வில்லலோபோசு (Ruy López de Villalobos, 1500 – ஏப்ரல் 4, 1546) எசுப்பானிய நாடுகாண் பயணியாவார். மெக்சிக்கோவிலிருந்து அமைதிப் பெருங்கடலில் பயணித்து கிழக்கிந்தியத் தீவுகளில் எசுப்பானியாவின் தடம் பதித்தவர். வில்லலோபோசு பிலிப்பீன்சிற்கு எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டவர். 1542 இல், இவர் அமைதிப் பெருங்கடலில், தற்கால ஹவாய் எனக் கருதப்படும் தீவுக்கூட்டங்களையும் கண்டறிந்ததாக நம்பப்படுகின்றது; இருப்பினும் இதனை எசுப்பானியா யாருமறியா வண்ணம் காத்ததாகவும் கூறப்படுகின்றது.

ருய் லோபேசு டி வில்லலோபோசு
பிறப்புca. 1500
மாலாகா, எசுப்பானியா
இறப்புஏப்ரல் 4, 1546 (அகவை 45–46)
அம்போன் தீவு, மலுக்கு தீவுகள், இந்தோனேசியா
அறியப்படுவதுஎசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக பிலிப்பீன்சிற்கு லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டார்.

வெளி இணைப்புகள்

தொகு