ருஹானியத்

அகில இந்திய சூஃபி & மறைபொருள் இசை விழா

ருஹானியத் - அகில இந்திய சூஃபி & மறைபொருள் இசை விழா என்பது இந்தியாவின் எட்டு மாநிலங்களில் நடைபெறும் ஒரு ஆன்மீகம் சார்ந்த இசைத் திருவிழாவாகும் . இது மும்பையை தலைமையகமாகக் கொண்ட கலாச்சார அமைப்பான ஆலமரம் நிகழ்ச்சிகள்(பன்யன் ட்ரீ ஈவன்ட்ஸ்) என்ற நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இசை விழாக்களில் இது மிகப்பெரிய ஒன்றாகும். மேலும் இது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, சத்தீஸ்கர், அகமதாபாத் மற்றும் புவனேஷ்வர் என இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடைபெறுகிறது.[1] இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், சூஃபி கவ்வாலிகள் , மாய எதார்த்த இசைக்கலைஞர்கள் மற்றும் கபீர் பந்தி இசைஞர்கர் போன்றோர் இந்த திருவிழாவில் இசையமைத்து பங்களிக்கின்றனர்.[2]

ருஹானியத் - அகில இந்திய சூஃபி & மறைபொருள் இசை விழா
நாள்நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2001 - ம் ஆண்டு முதல்
Founded byஆலமரம் நிகழ்ச்சிகள் நிறுவனம்
வலைத்தளம்
http://www.ruhaniyat.com

வரலாறு

தொகு

டாடா குழுமம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்போடு ஆலமரம் நிகழ்ச்சிகள்(பன்யன் ட்ரீ ஈவன்ட்ஸ்) நிறுவனத்தின் இயக்குனர்களான மகேஷ் பாபு மற்றும் நந்தினி மகேஷ் ஆகியோரின் கனவுக்குழந்தையான இந்த ஆன்மீக இசைத்திருவிழா 2001 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து சூஃபி மற்றும் மறைபோருள் தன்மையுள்ள இசையை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க நிகழ்ச்சியாக உருவெடுத்து நடைபெற்றுவருகிறது.[3] ஃபக்கீர், பவுல், மாய குணப்படுத்துபவர்கள், துறவிகள், நாட்டுப்புறப்பாடகர்கள், கபீர்பந்திகள், ஜிகிர்-ஜாரி பாடகர்கள், வார்காரிகள், ஷாபாத் பாடகர்கள், கவ்வால்கள் என கலவையான ஆன்மீக பாடகர்கள் இசையமைக்கும் இந்த திருவிழாவில் எகிப்து, துருக்கி, ஈரான், சூடான், பல்கேரியா, நார்வே, செனகல், மங்கோலியா, சைபீரியா மற்றும் பெல்ஜியம் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். உலகளாவிய சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒவ்வொரு மனிதனின் தத்துவார்த்த ரீதியிலான உள்நோக்கிய பயணம் என்பதை அடிப்படையாகக்கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருவிழா

தொகு

ருஹானியாத் என்றால் ஆத்மார்த்தம் என்ற பொருள் உண்டு . அதற்கேற்ப இந்த திருவிழாவில் இசைக்கப்படும் அனைத்து பாரம்பரிய , நாட்டுப்புற மற்றும் சூஃபி இசைமழையில் பார்வையாளர்களை நனைக்க இந்தியாவின் அறியப்படாத கிராமங்கள், துருக்கி , எகிப்து , சிரியா போன்றவற்றின் உட்புறங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த இசை ஞானிகள் வரவழைக்கப்பட்டு இசைக்கின்றனர[4] வருடாவருடம் நவம்பர் மாத கடைசியில் மும்பை மாநகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு டெல்லி, கொல்கத்தா, பெங்களூரூ, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் நகரங்களில் நடைபெற்று கடைசியாக புனே நகரத்தில் உள்ள எம்ப்ரெஸ் தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி மாத கடைசியில் முடிவடைவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 2020 ம் ஆண்டு மட்டுமே கோவிட் காரணமாக இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை.

பங்கேற்றுள்ள இசையாளர்கள்

தொகு

துவா குடியரசைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவான Huun Huur Tu, இந்திய கலைஞர்களான அசுப்ரீத் கவுர் மற்றும் குழு (பஞ்சாப்), ராமேஸ்வரி தேவி மற்றும் குழு (உத்தரகாண்ட்), பார்வதி பாவுல் (மேற்கு வங்காளம்), கச்ரா கான் மற்றும் குழு (ராஜஸ்தான்), பிரஹலாத் சிங் டிப்பானியா மற்றும் குழு (மத்திய பிரதேசம்) கின்னரா கதா (தெலுங்கானா), ஜோக்வா & பாருத் ராதா குடே (மகாராஷ்டிரா) மேலும்ஹேமந்த் சௌஹான், தாதி ஜத்தா, காஷ்மீரி கலாம், அவதூத் காந்தி, வார்சி பிரதர்ஸ் , அதீக் ஹுசைன் கான் , மணிப்பூரின் அசான் ஃபகிர், ஹபீசா பேகம் சவுத்ரி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸைச் சேர்ந்த கபீர்பந்தீஸ், பிரஹலாத் டிப்பானியா ஆகியோரின் ஜாரி சூஃபி இசையமைப்புகள், ராகேஷ் பட், விதல் ராவ் ஆகியோரின் ஜாகர் இசை.[5] போன்ற பல இசையாளர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Express News Service (2008-11-22). "Ruhaniyat brings to city 'doctors of the soul'". Express India. Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
  2. ruhaniyat official website
  3. "Metro Plus Hyderabad / Events : Ruhaniyat is back". தி இந்து. 2009-01-12. Archived from the original on 2009-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
  4. "Metro Plus Hyderabad / Events : Spiritual odyssey". தி இந்து. 2009-01-21. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
  5. "Business Line : Features / Life News". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருஹானியத்&oldid=3741857" இலிருந்து மீள்விக்கப்பட்டது