ரூபா டி. மவுட்கில்

ரூபா டி. மவுட்கில் என்பவர் இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். ரூபா கர்நாடக மாநிலம், தாவணகெரேவைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இந்திய காவல் பணியை விரும்பி ஏற்றார். ஐதராபாத்தில் நடந்த இகாப ப‌யிற்சியில் ஐந்தாவது இடத்தையும் பிடித்த இவர் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டுள்ளார். இவர் துனிச்சலான அதிகாரியாக கருதப்படுகிறார்.

2000 ஆம் ஆண்டு பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார், அங்கு செயல்பட்டுவந்த கனிமவள கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். இதுபோன்ற இவரது பணிகளின் காரணமாக அடிக்கடி பணிமாற்றம் செய்யப்பட்டு, யாதகிரி, கதக், தும்கூர் உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி யுள்ளார். தார்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஹூப்ளியில் அப்போதைய‌ மத்திய‌பிரதேச முதல்வர் உமா பாரதி பங்கேற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கு அப்போதைய ஹூப்ளி மாவட்ட நீதிபதியான ஜான் மைக்கேல் டி' குன்ஹா அளித்த உத்தரவின்பேரில், உமாபாரதியை கைது செய்தார். 2017 சூன் மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க அதிகாரிகள் இரண்டு கோடி கையூட்டு பெற்றதாக புகார் அளித்தார்.[1]

கன்னட முன்னணி நாளிதழ்களில் காவல் துறை சீர்திருத்தம், பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதாபிமானம் தொடர்பாக ரூபா கட்டுரைகள் எழுதி வருகிறார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "சசிகலா இலஞ்சம் கொடுத்தது குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமனம்". செய்தி. தினகரன். 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2017.
  2. இரா. வினோத் (14 சூலை 2017). "சசிகலாவை சிக்க வைத்த பெண் டிஐஜி ரூபா யார்?". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_டி._மவுட்கில்&oldid=3578166" இலிருந்து மீள்விக்கப்பட்டது