ரூபா தாஸ், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்கில் பிறந்தவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வளர்ந்தவருமான, பெண் பொழுதுபோக்கு தொழில்முனைவோரும் திரைப்பட தயாரிப்பாளரும் சமூக ஆர்வலருமாவார். சமூக தொழில்முனைவு, ஜனநாயகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றிற்காக தீவிரமாக போராடி வரும் இவர் உலகின் மிகப்பெரிய பெண்கள் தொழில்முனைவோர் வலையமைப்பு நிறுவனத்தின் முதல் இந்திய அமெரிக்க நிர்வாக இயக்குனருமாவார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பு, பெண்களுக்கு வணிக உறவுகளை கட்டியெழுப்பவும் புதிய வழிகளைக் கண்டறியவும், முதலீட்டு சிக்கல்களை தீர்க்கவும் உதவிவருகிறது. ரூபா, உத்கல் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டமும், புது தில்லியின் இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்வி நிறுவனத்தில் சர்வதேச வணிகம், சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் நிர்வாக பட்டமும் முடித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ், யுசிஎல்ஏ, ஆண்டர்சன் ஸ்கூல் மேனேஜ்மென்ட் அமைப்பிலிருந்து தொழில்முனைவோர் படிப்பையும் முடித்துள்ளார்.

ரூபா தாஸ்
பிறப்புரூபா தாஸ்
கட்டக், ஒடிசா, இந்தியா
பணிபொழுதுபோக்கு தொழில்முனைவோர்

இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஐக்கிய நாடுகள் அமைப்பு இணைந்து வழங்கிய இந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு முத்திரை சந்தைக்கான தேசிய விருதைப் பெற்ற இளைய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ரூபா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு வெற்றிகரமான ஊடக மற்றும் பொழுதுபோக்கு[1] நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் மூலம், பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகிய திரையரங்கு வெளியீடுகளுக்கான உலகளாவிய சந்தை உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதிலும் விரிவான திரைப்பட சந்தைப்படுத்தலிலும் உதவி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள முக்கிய திரைப்பட நிறுவனங்களுக்கு மூலோபாய நோக்கங்கள் மற்றும் திரைப்பட வசூல் இலக்குகளை சந்திக்க அனைத்து விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் டாலர் முதலீட்டையும் இதன் மூலம் ரூபா நிர்வகித்துள்ளார். ஹாலிவுட்டில் முதன்மையான பொழுதுபோக்கு மேலாண்மைக் குழுவாகக் கருதப்படும் பிரில்ஸ்டீன் என்டர்டெயின்மென்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்துடனும் தொழில்ரீதியாக தொடர்புகளைக் கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், உபேந்திரா கே. கருடன் இணைந்து உலக பெண் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். [2]இந்த அறக்கட்டளையானது பாலின நல்லிணக்கத்திற்காக வணிகம், பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மற்றும் கட்டியெழுப்புவதற்கும் "பிரீமியர் மகளிர் தலைமைத்துவ நிறுவனம்" உலகளவில் அங்கீகரிக்கப்படவும் போராடி வருகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Rupa Dash | CEO, World Woman Foundation & Futurist, DashShot - World Woman Foundation". Forbes Councils (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
  2. "Rupa Dash – Welcome to World Woman Summit" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
  3. "ହଲିଉଡ୍ ଫିଲ୍ମ ନିର୍ମାଣ କରିବେ ଓଡ଼ିଆ ଝିଅ". The Sambad. 11 October 2014 இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141018003120/http://sambadepaper.com/epaperpdf%5C11102014%5C11-md-bm-1.pdf. பார்த்த நாள்: 12 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_தாஸ்&oldid=3719315" இலிருந்து மீள்விக்கப்பட்டது