ரூபோசு ஓர்நீரோ
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ரூபோசு ஓர்நீரோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Furnariidae
|
பேரினம்: | Furnarius
|
இனம்: | F. rufus
|
இருசொற் பெயரீடு | |
Furnarius rufus (கிமெலின், 1788) |
ரூபோசு ஓர்நீரோ (Rufous Hornero (Furnarius rufus)) என்னும் பறவை நடுத்தர அளவிலான ஒரு பறவை வகையாகும். இது Furnariidae என்னும் இனத்தை சார்ந்தது.இது தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இப்பறவை அர்ஜென்டீனா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாகும். சிவப்பு அமெரிக்க பறவை என்றும் அழைக்கின்றனர்.
இப்பறவையை பொதுவாக மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களில் காணலாம். இதன் எல்லை தென்கிழக்கு (southeastern ),தெற்கு பிரேசில்(southern Brazil),பொலிவியா(Bolivia),பராகுவே (Paraguay),உருகுவே(Uruguay),வடக்கு (northern),மத்திய அர்ஜென்டீனா(central Argentina) மற்றும் மேலும் விரிவடைந்து வடக்கு படகோனியா (northern Patagonia) வரை காணப்படுகிறது.இப்பறவையின் இனம் பராகுவே மற்றும் அர்ஜென்டீனா நாட்டில் காணப்படும் முடி ஹோர்நீரோ என்னும் பறவை இனத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இதில் நான்கு துணை இனங்களும் உள்ளது.
ருபௌஸ் ஹோர்நீரோ( Rufous Hornero ) பறவை நடுத்தர அளவிலும், சதுர வால் மற்றும் சற்று வளைந்த அலகுடனும் காணப்படும். இதன் இறகு பார்பதற்கு சிவப்பு நிறத்திலும், பழுப்பு நிற கிரீடமும் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
வேறுபாடின்றி இப்பறவைகள் ஒன்று போலவும்,இளம் பறவைகள் சற்று வெளிர்(ஏனென்றால் அவை சுத்தமானவை) நிறத்திலும் காணப்படும்.இவை தரையில் நடக்கும் பொழுது பூச்சிகள், பாம்புகுட்டிகளை உணவாக உட்கொள்கின்றன. Rufous Hornero பறவைகளின் பாடல்கள் துணை இனங்களுக்கு இடையே வேறுபட்டவை. பொதுவாக ஆண் பறவையின் பாடல் வேகமாகவும்,பெண் பறவையின் பாடல் மெதுவாகவும் மற்றும் இரண்டும் இணைந்து பாடும் பொழுது ஒரே விகிதத்தில் தாங்கள் இறகுகளை அடித்துக்கொள்ளும்.
பெரிய மற்றும் சிறிய Rufous Hornero பறவைகள் கழுகு, சிறிய பாலூட்டிகள், உள்நாட்டு பூனைகள்,பாம்புகள் மற்றும் பெரிய பல்லிகளுக்கு இரையாகின்றன. எனினும் இதன் கூடு முடப்பற்றிப்பதால் வேட்டையாடி உண்ணும் விலங்குகளிடமிருந்து தன்னை காத்து கொள்கிறது .
இவை ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் இடையே முட்டைகள் இடுவதற்கு கோடை காலங்கள் முதலே கூடுகளை எழுப்ப தொடங்கி விடும். அவை இனப்பெருக்க பருவம் வரை தாங்கள் பிறந்த பிரதேசத்தில் இருக்கக்கூடும். இப்பறவைகளின் கூடுகள் களிமண் கொண்டு காட்டப்படும். இவற்றை மரம்,வேலி பதிவுகள்,தொலைபேசி கம்பங்கள் அல்லது கட்டிடங்களில் காணலாம் .
ஆண் பறவையும், பெண் பறவையும் இணைந்து இக்கூடின் சுவர்களை எழுப்புகின்றன.சிறிய அளவிலான இக்கூட்டை கட்டுவதற்கு 5 நாட்கள் போதும். ஆனால் இக்கூட்டை கட்டி முடிப்பதற்கு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.
இப்பறவைகள் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இரண்டு பறவைகளும் இணைந்து முட்டைகளை அடைகாக்கும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு 14-18 நாட்கள் ஆகும். குஞ்சுகளின் இறகுகள் வளர்வதற்கு 23-26 நாட்கள் ஆகும். இவை வளர்ந்து 6 மாதங்கள் வரை தன் பெற்றோர் பிரதேசத்தில் இருக்கும்.
இப்பறவைகள் பழைய கூடுகளை பயன் படுத்துவது இல்லை.ஆதலால் ஒரு கூடுக்கு அருகில் மற்றொரு கூடு இருப்பதை காணலாம். எனினும் இப்பறவைகள் பயன்படுத்தாத கூடுகளை மற்ற பறவைகள் இனப்பெருக்கத்திருக்க புதுப்பித்து கொள்ளலாம்.
மனித சுழலின் மாற்றங்களால் Rufous Hornero பறவைகள் பயனடைந்தனர்.இதையொட்டி பயன்படுத்தபடாத கூடுகளினால் மற்ற இனப் பறவைகளுக்கு நன்மையாக இருக்க கூடும். குங்குமப்பூ பின்ச் (Saffron Finch ) என்னும் இனம் பழைய ஓவன் பறவைகளின் கூடுகளை பயனபடுதிக் கொண்டிருக்கலாம் .இப்பறவைகளின் வாழ்விடங்கள் நமக்கு பரிச்சியமாக இருப்பதால் அர்ஜென்டீனா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மனிதர்களின் அச்சுறுத்தல்களின் மூலம் இப்பறவைகளை கவலை குறைந்த இனம் என்று IUCN.[1] பட்டியலிட்டுள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Furnarius rufus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)