ரெக்ஸ் (இயந்திர மனிதன்)

ரெக்ஸ் (Rex)என்பது செயற்கை உடலுறுப்பு அமைப்பியல், மரபு வழிப்பண்பியல் இரண்டையும் இணைத்து உருவாக்கிய மனிதனுமல்லாத மனித இயந்திரமுமல்லாத சைபர்க் (Cyberg) எனும் வகையைச் சேர்ந்த ஒரு மனித இயந்திரம் ஆகும். இலண்டனிலுள்ள சமூக உளவியலாளர் மருத்துவர் பெர்டாய்ட் மேயர், ரிச்சர்டு வாக்கர், மேத்யூ காடென் ஆகியோர் கூட்டு முயற்சியால் புறச்சட்டக அமைப்பில் 6 அடி உயரமுள்ள இவ்வியந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர். மின்கலத்தில் இயங்கும் இதயம், மனிதனின் சாதாரண இயக்க அளவில் ஒரு டிகிரி குறைவான அசைவைக் கொண்ட கைகள், கண்கள், காதுகள், நெகிழியாலான குருதி, எடையைத் தாங்கும் வகையில் கால்கள், உணவுக்குழல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் என ஒவ்வொன்றும் உலகிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர் பெர்ட்ராய்ட் மேயரின் முக வடிவமைப்பைக் கொண்டு இதன் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க 10 இலட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது. இது தற்போது இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


உசாத்துணைதொகு

ந. சு. சிதம்பரம், ரெக்ஸ் - புறச்சட்டக இயந்திர மனிதன் -அறிவியல் ஒளி. மே 2013 இதழ். பக். 28,29 இல் வெளியான கட்டுரை.