ரெடென்டோ டி. பெரான்டி
ரெடென்டோ டி. பெரான்டி (மார்ச் 4, 1923 - ஜூலை 29, 2008) என்பவர் நீண்டகால சுவாச நோயாளிகள் மற்றும் நுரையீரல் மறுவாழ்வுக்கான பராமரிப்பில் அமெரிக்காவில் முன்னோடியாக மருத்துவர் ஆவார். இவர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சிறந்த அணுகுமுறையான பிராணவாயு சிகிச்சையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர்.
ரெடென்டோ டி. பெரான்டி Redento D. Ferranti | |
---|---|
பெரான்டி தனது மனைவி இடாவுடன், திரிவி இத்தாலி | |
பிறப்பு | சுல்மோனா, இத்தாலி | 4 மார்ச்சு 1923
இறப்பு | 29 மார்ச்சு 2008 நியு ஹெவன், கானெக்டிகட் | (அகவை 85)
கல்லறை | திரிவி, இத்தாலி |
தேசியம் | இத்தாலியர் |
மற்ற பெயர்கள் | தினோ பெரான்டி |
குடியுரிமை | ஐக்கிய நாடுகள் |
பணி | நுரையீரல் நிபுணர் |
வாழ்க்கைத் துணை | இடா பெரான்டி |
பிள்ளைகள் | 6 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுரெடென்டோ டி. பெரான்டி இத்தாலியின் சுல்மோனாவில் 1923ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் மரிய அசுண்டா கோலோமோசுக மற்றும் மார்கோ பெராண்டி. இவர்கள் தையற்காரராகவும் இரயில்வே ஊழியராகவும் பணியாற்றினர். 1952ல் ரோமில் உள்ள மருத்துவப் பள்ளியில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர், கிங்ஸ் கவுண்டியில் சிறிதுகாலம் உறைவிட மருத்துவராக பணியாற்றியப் பின்னர், நியூயார்க்கில் உள்ள தூய் வின்செண்ட் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். அங்கு மயக்கமருந்து நிபுணராக பணியாற்றிய இடா பிரிசியோவினை மணந்தார்.[1]
மருத்துவப்பணி
தொகுதிருமணத்திற்குப் பின்னர் கனெக்டிகட்டிற்கு குடிபெயெர்ந்து, வாலிங்போர்டில் உள்ள கெய்லார்ட் மருத்துவமனையில் 1969 முதல் 1997 வரை மருத்துவராக பணியாற்றினார். இங்குள்ள பல மருத்துவ மனைகளிலும் சேவை புரிந்த இவர், சுவாச மருத்துவம் தொடர்பான மருத்துவ பள்ளியினை தூய ராபெல் மருத்துவமனையில் துவக்கியதில் துணை புரிந்தார். இவர் நீண்டகால சுவாச நோயாளிகள் மற்றும் நுரையீரல் மறுவாழ்வுக்கான பராமரிப்பில் அமெரிக்காவில் முன்னோடியாக இருந்தார். நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சிறந்த அணுகுமுறையான பிராணவாயு சிகிச்சையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர், பெராண்டி. மேலும் சிறிய கொள்கலன்களில் திரவ ஆக்ஸிஜனின் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மருத்துவர்களில் முதன்மையானவர்களில் இவரும் ஒருவர்.[2] நுரையீரல் துறையில் இவரது ஆரம்பக்கால பணிகளால் இவர் "நவீன நுரையீரல் மறுவாழ்வின் தந்தை" என்ற பட்டத்தைப் பெறுகிறார். இவர் நுரையீரல் மருத்துவராகவும் மற்றும் மருத்துவ இயக்குநராகவும், யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இணைப் பேராசிரியராகவும் இருந்தார்.[3] கெயிலார்ட் மருத்துவமனையின் நுரையீரல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரான்டி முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். மேலும் தூக்க ஆய்வின் காரணகர்த்தாவாக இருந்தார். இது நியூ இங்கிலாந்தில் மருத்துவமனையின் மிகப்பெரிய தூக்க ஆய்வு திட்டத்திற்கு வழிவகுத்தது மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும்.
விருது
தொகுஅமெரிக்க நுரையீரல் கழகம் மற்றும் கனெக்டிகட் மார்பக சங்கம் வழங்கிய மனிதாபிமான விருது, கெயிலார்ட் பதக்கம் வழங்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.celentanofuneralhome.com/obits/obituary.php?id=403403
- ↑ "Redento Ferranti Obituary (2008) - Hartford Courant". www.legacy.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
- ↑ "R Ferranti's research works | Yale University, CT (YU) and other places". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
- "Redento Ferranti Obituary (2008) - New York Times". www.legacy.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
- "Redento Ferranti Obituary (2008) - Hartford Courant". www.legacy.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
- Chan, Charles K.; Mohsenin, Vahid; Loke, Jacob; Virgulto, Jim; Sipski, M. Leonide; Ferranti, Redento (1987). "Diaphragmatic Dysfunction in Siblings with Hereditary Motor and Sensory Neuropathy (Charcot-Marie-Tooth Disease)" (in en). Chest 91 (4): 567–570. doi:10.1378/chest.91.4.567. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0012369215430545.
- Niederman, Michael S.; Merrill, William W.; Ferranti, Redento D.; Pagano, Kristine M.; Palmer, Lucy B.; Reynolds, Herbert Y. (1984-06-01). "Nutritional Status and Bacterial Binding in the Lower Respiratory Tract in Patients with Chronic Tracheostomy". Annals of Internal Medicine 100 (6): 795–800. doi:10.7326/0003-4819-100-6-795. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-4819. https://www.acpjournals.org/doi/10.7326/0003-4819-100-6-795.
- Niederman, Michael S.; Ferranti, Redento D.; Zeigler, Annemarie; Merrill, William W.; Reynolds, Herbert Y. (January 1984). "Respiratory Infection Complicating Long-term Tracheostomy" (in en). Chest 85 (1): 39–44. doi:10.1378/chest.85.1.39. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0012369215401412.
- Nutrition and ventilatory function. Ferranti, R. D. (Redento D.), 1923-. London: Springer-Verlag. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-19776-1. இணையக் கணினி நூலக மைய எண் 25867312.
{{cite book}}
: CS1 maint: others (link) - Mohsenin, Vahid; Guffanti, Enrico E.; Hilbert, Janet; Ferranti, Redento (March 1994). "Daytime oxygen saturation does not predict nocturnal oxygen desaturation in patients with chronic obstructive pulmonary disease" (in en). Archives of Physical Medicine and Rehabilitation 75 (3): 285–289. doi:10.1016/0003-9993(94)90030-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0003999394900302.
- Palmer LB, Merrill WW, Niederman MS, Ferranti RD, Reynolds HY (April 30, 1986). "Bacterial adherence to respiratory tract cells. Relationships between in vivo and in vitro pH and bacterial attachment.". The American Review of Respiratory Disease 133(5): 784–788. https://europepmc.org/article/med/3706886.
- Ferranti, R. D.; Roberto, M.; Brown, C.; Coelho, C. A. (1992), Ferranti, R. D.; Rampulla, C.; Fracchia, C.; Ambrosino, N. (eds.), "Oral Intake, O2, Dyspnea, Dysphagia and Other Considerations in Chronic Obstructive Pulmonary Disease Patients", Nutrition and Ventilatory Function, Current Topics in Rehabilitation (in ஆங்கிலம்), London: Springer, pp. 181–189, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4471-3840-2_19, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4471-3840-2, பார்க்கப்பட்ட நாள் 2020-11-24
- Ferranti, R. D.; Malfa, R. (1993), Rampulla, C.; Fracchia, C.; Ambrosino, N. (eds.), "Metabolism and Nutrition in Rehabilitation of the Patient with Respiratory Insufficiency", Cardiopulmonary Rehabilitation, London: Springer London, pp. 105–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4471-3779-5_11, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4471-3781-8, பார்க்கப்பட்ட நாள் 2020-11-24
- I.V.U.N., Fall 1989, v. 3, No.2, Fall 1989
- ALDRICH, THOMAS K. MD; KARPEL, JILL P. MD; UHRLASS, RAYMOND M. CRTT; SPARAPANI, MARK A. RRT; ERAMO, DONNA CRTT; FERRANTI, REDENTO MD, "Weaning from mechanical ventilation". Critical Care Medicine: February 1989 - Volume 17 - Issue 2 - p 143-147