டெட் (மாநாடு)

(ரெட் மாநாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டெட் (மாநாடு) (TED – Technology, Entertainment, Design) என்பது தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு என்று பொருள்படும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளின் கூட்டுச் சொல் ஆகும். இது தொழில்நுட்பம், மகிழ்கலைகள், வடிவமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் அமைப்பு. இதன் டெட் மாநாடு புகழ் பெற்றது. அழைப்பின் பேரில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த மாநாட்டில் முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள்ளே முக்கிய கருத்துருக்களைப் பற்றி உரையாற்றுவார்கள். இந்த உரைகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

TED Conferences, LLC
வகைLLC
நிறுவனர்(கள்)Richard Saul Wurman[1]
தலைமையகம்நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம் மற்றும் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடா
சேவை வழங்கும் பகுதிஉலகு முழுதும்
உரிமையாளர்கள்Sapling Foundation[2]

குறிக்கோள் வாசகம்

தொகு

மக்களிடையே சேரவேண்டிய மதிப்புமிக்க யோசனைகள்

தமிழகத்தில்

தொகு

தமிழகத்தில் சென்னை மாநகரில் சாய்ராம் பொறியிற் கல்லூரியில் டெட்எக்க்ஸ் (TEDX)எனப்படும் மாநாடு

டிசம்பர் 28ஆம் தேதி 2016ல் நடந்தது. இதில் 11 பேர் பங்குபெற்று உரையாற்றினர்.[3] .[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Hefferman, Virginia (January 23, 2009). "Confessions of a TED addict". The New York Times. http://www.nytimes.com/2009/01/25/magazine/25wwln-medium-t.html. பார்த்த நாள்: 2010-07-12. 
  2. "About TED: Who we are: Who owns TED". TED: Ideas Worth Spreading. TED Conferences, LLC. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
  3. http://www.ted.com/tedx/events/1925
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
TED (conference)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்_(மாநாடு)&oldid=3556720" இலிருந்து மீள்விக்கப்பட்டது