ரெண்ட் ஓபலோச்

ரெண்ட் ஓபலோச் (ஆங்கில மொழி: Trent Opaloch) (பிறப்பு: திசம்பர் 31, 1969) என்பவர் கனடா நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கிய கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[1] மற்றும் நெயில் புலோம்கம் இயக்கிய டிஸ்ட்ரிக்ட் 9 (2009), எலைசியம் (2013), சேப்பீ (2015) போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

ரெண்ட் ஓபலோச்
பிறப்புதிசம்பர் 31, 1969 (1969-12-31) (அகவை 53)
தண்டர் பே, ஒன்டாரியோ, கனடா
தேசியம்கனடியன்
பணிஒளிப்பதிவாளர்

இவர் 2010 ஆம் ஆண்டில் டிஸ்ட்ரிக்ட் 9 என்ற திரைப்படத்தில் பணிபுரிந்ததற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரித்தானிய அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2] மற்றும் 2020 ஆம் ஆண்டில் பெர்ல் ஜாமினின் 'ரெட்ரோகிரேட்' என்ற இசை காணொளியில் நடித்துள்ளார்.[3]

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு இயக்குனர் குறிப்புகள்
2006 எல்லோ நெயில் புலோம்கம் குறும்படம்
2009 டிஸ்ட்ரிக்ட் 9 பரிந்துரை - சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரித்தானிய அகாடமி விருது
2013 எலைசியம்
2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ரூசோ சகோதரர்கள்
2015 சேப்பீ நெயில் புலோம்கம்
2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் ரூசோ சகோதரர்கள்
2018 அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
2019 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

மேற்கோள்கள்தொகு

  1. Gee, Dana (April 21, 2014). "Lensman loves getting lost in the images from new Captain America film". The Province. Archived from the original on April 21, 2014. https://www.webcitation.org/6P0EW3bi1?url=http://www.theprovince.com/entertainment/Lensman+loves+getting+lost+images+from+Captain/9737395/story.html. பார்த்த நாள்: April 21, 2014. 
  2. "Orange British Academy Film Awards 2009 Nominations". Bafta.org. January 21, 2010. 2010-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 2, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Pearl Jam Recruits Climate Change Activist Greta Thunberg for Cautionary 'Retrograde' Visual (Watch)". Variety. May 14, 2020.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெண்ட்_ஓபலோச்&oldid=3478588" இருந்து மீள்விக்கப்பட்டது