ரெனி போர்ஜசு
ரெனி மரியா போர்ஜசு (பிறப்பு 25 பிப்ரவரி 1959) என்பவர் இந்தியப் பரிணாம உயிரியலாளர் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் பேராசிரியர் ஆவார்.[1][2] இவர் அறிவியலாளராகப் பணியாற்றியபோது இவர் செய்த பணி இந்தியா டுடே தந்து சிறப்புச் செய்தியில் விவரித்து வெளியிட்டது. அத்திப்பழங்கள் மற்றும் அத்தி-குளவிகள் போன்ற தாவர மற்றும் விலங்கு தொடர்புகளுக்குச் சிறப்புக் குறிப்புடன் நடத்தை மற்றும் உணர்ச்சி சூழலியல் இவரது ஆராய்ச்சி அமைந்தது. இவர் இந்திய அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்தில் ஆர்வமுடையவர் ஆவார்.[3]
ரெனி போர்ஜசு Renee M Borges | |
---|---|
பிறப்பு | 25 பிப்ரவரி 1959 |
தேசியம் | இந்தியர் |
பணியிடங்கள் | இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் |
கல்வி கற்ற இடங்கள் | தூய சவேரியார் கல்லூரி, மும்பை, மும்பை பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | டெட் பிளமிங் |
அறியப்படுவது | வேதிசூழலியல், தாவர-விலங்கு குறுக்கீடுகள், நடத்தை உயிரியல், பரிணாம உயிரியல் |
கல்வி
தொகுபோர்ஜசு மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் அறிவியலில் பட்டம் படிப்பினை முடித்தார். இங்கு இவர் 1979-ல் விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியலில் இளநிலைப் பட்டம் (சிறப்புத் தகுதியுடன்) பெற்றார். இவர் 1982-ல் மும்பை பல்கலைக்கழக அறிவியல் கழகத்தில் விலங்கு உடலியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். புளோரிடாவின் கோரல் கேபிள்ஸில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் "வள பன்முகத்தன்மை மற்றும் இந்திய மலை அணில், ரதுபா இண்டிகாவின் உண்வூட்ட சூழலியல்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[4]
நூல் பட்டியல்
தொகுபோர்ஜெசு இயற்கையின் மீதான தாக்குதல்: அறிவியல் மற்றும் பாதுகாப்பின் அரசியல் என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார்.[5]
அங்கீகாரம்
தொகுபோர்ஜெசின் பங்களிப்புகள் பின்வரும் வழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ] அவரது சில நியமனங்கள்:
- இந்திய அறிவியல் கழகம் உறுப்பினர்[6]
- ஜே. சி. போசு தேசிய ஆய்வு நிதி விருது (2016)[7]
- இந்தியத் தேசிய அறிவியல் கழகம்[8]
- விலங்கு அறிவியலுக்கான அறிவியல் தொழில்நுட்பத் துறை-திட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் (2016–19)[9]
- உறுப்பினர், மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு, இந்திய அரசு, 2010-2011[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "IISc - Profile at Centre for Ecological Sciences". பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
- ↑ "59-62.pdf" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.
- ↑ "Curriculum Vitae: Renee Borges" (PDF). Indian Institute of Science.
- ↑ Borges, Renee. "Resource heterogeneity and the foraging ecology of the Malabar giant squirrel, Ratufa indica". University of Miami. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ Saberwal, Vasant; Rangarajan, Mahesh (2005). "The Anatomy of Ignorance". Battles Over Nature: Science and the Politics of Conservation. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178241418. பார்க்கப்பட்ட நாள் 2017-03-19.
- ↑ "Indian Academy of Sciences-Fellows".
- ↑ "J C Bose fellowship awardees 2016" (PDF).
- ↑ "Indian National Science Academy- Fellow".
- ↑ "DST-PAC Animal Sciences" (PDF).
- ↑ "Western Ghats Ecology Expert Panel" (PDF).