ரேணு சி லஸ்கா்

ரேணு சக்கரவா்த்தி லஸ்கா் (Renu Chakravarti Laskar) ஓா் இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். அவர் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியல் பேராசிரியர். அவா் கணிதத்தில் தனது முனைவர் பட்டத்தை 1962 ஆம் ஆண்டில் இலினொய் பல்கலைக்கழகத்தில் பெற்றாா்.[1]

லஸ்கர் பெரும்பாலும் ஆதிக்க எண்கள் மற்றும் வட்ட வளைவு வரைபடங்களின் கோட்பாட்டிற்கு பங்களித்துள்ளாா். அவர் பால் எர்டோஸ் உடன் இணைந்து நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளாா். [2]

இளம் பருவம் மற்றும் கல்வி

தொகு

ரேணு சி. லஸ்கர் 1937 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பீகார் மாகாணத்தில் பிறந்தார். அவரது குடும்பத்தின் உதவியுடன், அவர் தனது கல்வி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தார். 1955 ஆம் ஆண்டு பீகாாிலுள்ள பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தனது மூத்த சகோதராின் உதவியினால் தனது ஆராய்ச்சிப் படிப்பிற்காக அமொிக்கா சென்று தனது முனைவர் பட்டப் படிப்பைத் தொடா்ந்தாா். 1962 ஆம் ஆண்டு ஹென்றி ராய் ப்ரஹானாவின் மேற்பாா்வையில் இலினொய் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் UIUC இலிருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவாா். பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்பி கரக்பூர் இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் முதல் பெண் பேராசிாியரானாா். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லஸ்கர் வட அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பணியில் சோ்ந்தாா், பின்னர் இறுதியாக 1968 ஆம் ஆண்டில் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[3]

கல்வி வாழ்க்கை

தொகு

லஸ்கர் தனது வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதோடு கணிதத்தில் பெண்களுக்கு புதிய தர நிலைகளை அமைத்துத் தந்தார். வெளியிடப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையில் பிரிநிலைக் கணிதவியலில் பெண்களிடையே உயர் தரநிலையில் அவர் உள்ளார். மேத்சயிநெட் (MathSciNet) படி, இவரது 100 க்கும் மேற்பட்ட வெளியீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் அவரது வெற்றிக்கான காரணத்தின் ஒரு பகுதியாக ராஜ் சந்திர போஸ் மற்றும் பால் எர்டோஸ் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பினைப் பயன்படுத்திக் கொண்டமையைக் குறிப்பிடலாம். முனைவர் பட்டம் படிப்பவா்களுக்கு மேற்பார்வையாளராகச் செயல்பட்டதன் மூலம் அவரது செல்வாக்கு மேலும் விாிவடைந்தது. 1986 ஆம் ஆண்டு லஸ்கர் ஸ்டீவ் ஹெட்னெனிமி உடன் இணைந்து கிளெம்சன் யுனிவெர்சிட்டியில் சிறிய கணித மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தாா். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் இம்மாநாடு சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.[4]

குறிப்புகள்

தொகு
  1. கணித மரபியல் திட்டத்தில் ரேணு சி லஸ்கா்
  2. "Erdös Number Project - The Erdös Number Project- Oakland University". oakland.edu. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.
  3. "Renu Laskar: Changing Obstacles into Opportunities - AWM Association for Women in Mathematics". google.com. Archived from the original on 23 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "History of Mathematical Sciences at Clemson University". clemson.edu. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_சி_லஸ்கா்&oldid=3715984" இலிருந்து மீள்விக்கப்பட்டது