ரேணு பாலா

இந்திய அரசியல்வாதி
(ரேனு பாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரேணு பாலா (Renu Bala) (பிறப்பு 1980) இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் ஹரியானா சட்டமன்ற உறுப்பினராக சடௌரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1][2][3] 2024 ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியால் அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார்.

ரேனு பாலா
ஹரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பல்வந்த் சிங்
தொகுதிசடௌரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ரேனு பாலா அரியானாவின் ஜகத்ரி பகுதியைச் சேர்ந்தவர். 12 ஆம் வகுப்பை முடித்த இவர் ஏப்ரல் 2001 இல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் பி. ஏ. முதலாமாண்டு படிக்கும்போது தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார் .[4]

தொழில்

தொகு

ரேனு பாலா 2019 அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் சதௌரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 65,806 வாக்குகளைப் பெற்ற இவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பல்வந்த் சிங்கை 17,020 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sadhaura (SC) Constituency Election Results 2019: Sadhaura (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-09.
  2. "Renu Bala, Cong: Latest Updates On Renu Bala, Lok Sabha Constituency Seat". NDTV. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  3. "Sadhaura Election Results 2019 Live Updates (सढौरा):Renu Bala of Congress Wins". News18. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  4. "Renu Bala(Indian National Congress(INC)):Constituency- SADHAURA (SC)(YAMUNANAGAR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-09-09.
  5. Live, A. B. P. "Sadhaura Assembly Election Results 2020 Live Updates, Sadhaura Assembly Election Latest News & Updates". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_பாலா&oldid=4134581" இலிருந்து மீள்விக்கப்பட்டது