ரொகான் தலுவத்த
ரொகான் டி சில்வா தலுவத்த (9 மே 1941 - 27 ஆகஸ்ட் 2018) என்பவர் ஒரு இலங்கை இராணுவத்தின் பொது அதிகாரி ஆவார். இவர் இலங்கை இராணுவத்தின் தளபதியாகவும், இலங்கை பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார்.
ரொகான் தலுவத்த (Rohan Daluwatte) | |
---|---|
பிறப்பு | அம்பலாங்கொடை, பிரித்தானிய இலங்கை | 9 மே 1941
இறப்பு | 27 ஆகத்து 2018 கொழும்பு, இலங்கை | (அகவை 77)
சார்பு | இலங்கை |
சேவை/ | இலங்கை தரைப்படை |
சேவைக்காலம் | 1963–1998 (35 ஆண்டுகள்) |
தரம் | General |
படைப்பிரிவு | Sri Lanka Armoured Corps |
கட்டளை | Commander of the Army Overall Operational Commander |
போர்கள்/யுத்தங்கள் | ஈழப் போர் |
இவர் இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இவரது கட்டளையின் கீழ் சூரியக் கதிர் நடவடிக்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றியது பெரும் சாதனையாகும். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பெரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். ஜெயசிக்குறு, ஓயாத அலைகள் 1996, சத் ஜெயா நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளில் கலவையான வெற்றியும் கண்டார்.[1][2][3][4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதலுவத்த இலங்கையின் தெற்கில் உள்ள ஒரு கடற்கரை நகரமான அம்பலாங்கொடாவில்தோட்டக்காரரும் முன்னாள் தடகள வீரருமான டி.ஹெச் பாலிசு டி சில்வாவுவுக்கும் டி.டபிள்யூ லீலா சோமவதிக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இவருக்கு மாலினி என்று ஒரு சகோதரியும், சுசந்த, பின்சிறி, ரூபசிறி, தனசிறி என்று நான்கு சகோதரர்கள் இருந்தனர்.
இவர் தர்மபால வித்தியாலயத்திலும், ஆனந்தா கல்லூரியிலும் கல்வி பயின்று முடித்தார். இவர் தனது பள்ளி வாழ்க்கையில் 1957 முதல் 1960 வரை ஆனந்த கல்லூரி பூப்பந்து அணியின் தலைவராக இருந்தார். 1959 - 1960-ல் கல்லூரி டென்னிஸ் அணியின் உறுப்பினராக இருந்தார். 1960 இல் ஆனந்தா முதல் 11 இல் இலக்குமுனைக் காப்பாளராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 . 26 January 2011 http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=16845.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ . 27 August 2018. http://www.thinakaran.lk/2018/08/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26470/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ http://www.army.lk/pastcommanders.php.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ . 13 October 1998. http://news.bbc.co.uk/2/hi/south_asia/192723.stm.