ரோகிணி ஆறு (Rohini River), நேபாள நாட்டின் இமயமலையில் உள்ள சிவாலிக் மலைத்தொடரில் உள்ள லும்பினி பிராந்தியத்தின் கபிலவஸ்து மற்றும் ரூபந்தேகி மாவட்டத்தில் உற்பத்தி ஆகி, பின் தெற்காக பாய்ந்து இந்தியாவின் உத்தரப் பிர்தேசத்தின் கோரக்பூரில் பாயும் மேற்கு ரப்தி ஆற்றின் இடது கரையில் கலக்கிறது. பின்னர் மேற்கு ரப்தி ஆறு காக்ரா ஆற்றுடன் கலக்கிறது. காக்ரா ஆறு கங்கை ஆற்றுடன் கலக்கிறது. [1] 122 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரோகிணி ஆறு, 2686 சதுர கிலோ மீட்டர் வடிநிலத்தைக் கொண்டது.

ரோகிணி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகபிலவஸ்து மாவட்டம், ரூபந்தேகி மாவட்டம், தென் மத்திய நேபாளம்
 ⁃ ஏற்றம்850 m (2,790 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மேற்கு ரப்தி ஆறு, கோரக்பூர், உ பி, இந்தியா
 ⁃ உயர ஏற்றம்
75 m (246 அடி)
நீளம்122 km (76 mi)
வடிநில அளவு2,686 km2 (1,037 sq mi)

அரச மரபினர்கள்

தொகு

கௌதம புத்தர் காலத்தில் ரோகிணி ஆற்றின் இரு கரையிலும், சாக்கியர்களும், கோலியர்களும் ஆண்டனர். வேளாண்மை நிலங்களின் நீர் பாசானத்திற்கு, ரோகிணி ஆற்று நீரின் உரிமைக்காக சாக்கியர்களும், கோலியர்களும் ஒரு முறை போரிட்டதாகவும்,[2]பின்னர் புத்தரின் அறிவுரைப்படி இரு அரச மரபினர்களும் போரை நிறுத்தினர் எனவும் கருதப்படுகிறது.[3]

நகரங்கள்

தொகு

ரோகிணி ஆற்றாங்கரையில் கபிலவஸ்து மற்றும் லும்பினி நகரங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Google maps view of River rohni
  2. "CONFLICT WITH SAKYA SANGH". Archived from the original on 2006-08-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  3. Jayetilleke, Rohan L. (October 19, 2005). "Kapilavastu India – Nepal battle of sites". Daily News இம் மூலத்தில் இருந்து 2010-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100128223457/http://www.dailynews.lk/2005/10/19/fea14.htm. பார்த்த நாள்: 2009-01-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_ஆறு&oldid=3968211" இலிருந்து மீள்விக்கப்பட்டது