ரோகிணி (செயற்கைக்கோள்)

ரோகிணி (rohini) என்பது இஸ்ரோவால் செலுத்தப்பட்ட தொடர் செயற்கைக்கோளின் பெயர் ஆகும். ரோகிணி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தி வண்டிகள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டவை.

ரோகிணி
தயாரிப்பாளர்இஸ்ரோ
நாடுஇந்தியா இந்தியா
இயக்கம்இஸ்ரோ
செயற்பாடுகள்சோதனை செயற்கைக்கோள்
விவரக்கூற்று
ஏவு திணிவு30–41.5 கிலோகிராம்கள் (66–91 lb)
ஆற்றல்3 வாட்டு (அலகு)
16 வாட்டு (அலகு)
கருவிகள்செலுத்தி வண்டி கண்காணிப்பான்
புகைப்படக் கருவி
சுற்றுப்பாதை முறைமை400கி.மீ பூமியின் தாழ் வட்டப்பாதை
தயாரிப்பு
நிகழ்நிலைஓய்வு பெற்றது
ஏவப்பட்டது4
நீக்கம்ரோகிணி அர்எஸ்-டி2
தொலைந்தவை2
முதல் ஏவல்ரோகிணி தொழில்நுட்பம்
10 ஆகஸ்ட் 1979
கடைசி ஏவல்ரோகிணி அர்எஸ்-டி2
17 ஏப்ரல் 1983

செயற்கைக்கோள் தொடர்

தொகு

ரோகிணி தொழில்நுட்பம்[1]

தொகு

இது 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 3 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.இது 10-08-1979 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது இதில் செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின் கண்காணிப்பான் பொருத்தப்பட்டிருந்தது.[2] இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையை அடையவில்லை இருப்பினும் இதன் செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின் (SLV) பணி மட்டும் வெற்றியாக அமைந்தது.[3]

அர்எஸ்-1[1]

தொகு

இதுவும் 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் இதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 18-07-1980 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.இது 305 x 919 கிமீ சுற்றுவட்டப் பாதையையில் 44.7° சாய்வாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 20 மாத காலம் உயிர்புடன் இருந்தது.[4]

அர்எஸ் –டி1[1]

தொகு

இது 38 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 31-05-1981 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.இதுவும் பாதி வெற்றி தான் பெற்றது இந்த செயற்கைக்கோளால் நாம் எதிர்பார்த்த அளவு தூரத்தை அடைய முடியவில்லை அதனால் 9 நாட்கள் மட்டுமே சுற்றுவட்டப்பாதையில் வட்டமிட்டது, அதாவது 186 x 418 கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் சோதனைக்காக எடுத்து சென்றது.[5]

அர்எஸ்-டி2[1]

தொகு

இது 41.5 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 17-04-1983 இல் செலுத்தப்பட்டது. 371 x 861 கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது. இந்த செயற்கைக்கோள் 17 மாதங்கள் உயிர்புடன் இருந்தது ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் இதில் இனைக்கப்பட்டிருந்தது, அது 2500 படங்களுக்கு மேல் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்த புகைப்பட கருவி சாதாரணமாகவும் மற்றும் அகச்சிவப்பு பட்டைகள் மூலமும் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருந்தது.[6]

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.csre.iitb.ac.in/isro/rohini.html
  2. http://www.bharat-rakshak.com/SPACE/space-satellite5.html பரணிடப்பட்டது 2009-03-15 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  4. http://www.isro.org/satellites/rs-1.aspx
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_(செயற்கைக்கோள்)&oldid=3570005" இலிருந்து மீள்விக்கப்பட்டது