ரோகு மீன்
ரோகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. rohita
|
இருசொற் பெயரீடு | |
Labeo rohita F. Hamilton, 1822 |
ரோகு (Rohu அல்லது roho labeo (Labeo rohita, இந்தி (ம)நேபாளத்தில்- रोहू मछली, ஒடியா- ରୋହୀ,) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3 அடி நீளம் உடையது.[சான்று தேவை] 30 கிலோ எடையளவுக்கு வளரும்.[சான்று தேவை] இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
தோற்றம்
தொகுஇம்மீனின் தலை கடலாவின் தலையைவிட சிறியது.இம்மீனின் கீழ் உதடு சுருக்கங்களுடன் காணப்படும், இம்மீனின் வாய் நேராக திறந்திருக்கும், இதன் செதில்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
உணவுப் பழக்கம்
தொகுஇது குளத்தின் நடு அல்லது இடைமட்டத்தில் உள்ள, தாவர விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில்3/4 முதல் 1 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[1]
இனப்பெருக்கக் காலம்
தொகுஇம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
உசாத்துணை
தொகுகாலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை