ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு

ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு (Rhodium(II) trifluoroacetate) என்பது Rh2(O2CCF3)4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம்(II) டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. சில கரிமத் தொகுப்பு வினைகளில் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மற்றும் இதன் வழிப்பெறுதிகள் எக்சுகதிர் படிகவியல் மூலம் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல ஈருலோக கார்பாக்சிலேட்டு அணைவுகளில் காணப்படும் சீன விளக்கு கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுக்கொள்கிறது. இந்த கட்டமைப்பு Rh-Rh பிணைப்புக்கு இடமளிக்கிறது. இதன் இருப்பு இந்த Rh(II) இனத்தின் காந்தத்தன்மையை விளக்குகிறது. Rh-Rh பிணைப்பு இடைவெளி 238 பைக்கோமீட்டர் ஆகும்.[2]

ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருரோடியம் டெட்ராகிசு(முப்புளோரோ அசிட்டேட், ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு இருமம்
இனங்காட்டிகள்
31126-95-1
ChemSpider 380904
EC number 631-136-4
InChI
  • InChI=1S/4C2HF3O2.2Rh/c4*3-2(4,5)1(6)7;;/h4*(H,6,7);;
    Key: SZQVMUPTZFMHQT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10985187
  • C(=O)(C(F)(F)F)O.C(=O)(C(F)(F)F)O.C(=O)(C(F)(F)F)O.C(=O)(C(F)(F)F)O.[Rh].[Rh]
பண்புகள்
C8F12O8Rh2
வாய்ப்பாட்டு எடை 657.87 g·mol−1
தோற்றம் பச்சை நிற திண்மம்
தீங்குகள்
{
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நீரற்ற இந்த அணைவுச் சேர்மம் பச்சை நிறத்துடன் ஆவியாகும் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. ரோடியம்(II) அசிடேட்டை சூடான முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.:[3]

Rh2(O2CCH3)4 + 4 HO2CCF3 -> Rh2(O2CCF3)4 + 4 HO2CCH3

இந்த வினை அசிட்டிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. Rh-Rh பிணைப்பு தக்கவைக்கப்படுகிறது.

வினைகள்

தொகு

ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு பலவகையான லூயிசு காரங்களுடன் பெரும்பாலும் 2:1 விகிதாச்சார அளவுகளில் வினைபுரிந்து கூட்டுவிளைபொருள்களை உருவாக்குகிறது. இரண்டு Rh(II) மையங்களில் ஒவ்வொன்றிலும் "அச்சு" நிலைகளில் காரங்கள் பிணைக்கப்படுகின்றன:

Rh2(O2CCF3)4 + 2 L → Rh2(O2CCF3)4L2 (L = CO, RCN, R2SO, R3P, ...)

ரோடியம்(II) அசிடேட்டைக் காட்டிலும் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மிகவும் பலவீனமான காரங்களுடன் கூட பிணைகிறது. அறுமெத்தில்பென்சீன் மற்றும் எண்கந்தகத்துடன் கூட்டு விளைபொருளை உருவாக்குகிறது.[4]

ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு ஈரசோ சேர்மங்களால் ஆல்க்கீன்களின் வளையபுரோப்பனேற்ற வினையை ஊக்குவிக்கிறது:[1]

RCH\dCR'H + CH3CH2O2CCH(N2) -> cyclo\s(RCH)(R'CH)(CH3CH2O2CCH) + N2

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Doyle, Michael P.; Davies, Huw M. L.; Manning, James R.; Yu, Yang (2018). "Dirhodium(II) tetrakis(trifluoroacetate)". EEROS. doi:10.1002/047084289X.rd461.pub2. 
  2. Cotton, F. Albert; Dikarev, Evgeny V.; Feng, Xuejun (1995). "Unligated Dirhodium Tetra(trifluoroacetate): Preparation, Crystal Structure and Electronic Structure". Inorganica Chimica Acta 237 (1–2): 19–26. doi:10.1016/0020-1693(95)04662-S. 
  3. Felthouse, Timothy R. (1982). "The Chemistry, Structure, and Metal-Metal Bonding in Compounds of Rhodium(II)". Progress in Inorganic Chemistry. Vol. 29. pp. 73–166. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470166307.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-09370-1.
  4. Cotton, F. Albert; Dikarev, Evgeny V.; Petrukhina, Marina A. (2001). "Neutral Cyclooctasulfur as a Polydentate Ligand: Supramolecular Structures of [Rh2(O2CCF3)4]n(S8)m (N:m=1:1, 3:2)". Angewandte Chemie International Edition 40 (8): 1521–1523. doi:10.1002/1521-3773(20010417)40:8<1521::AID-ANIE1521>3.0.CO;2-M.