ரோடியம் முப்புளோரைடு
வேதிச் சேர்மம்
ரோடியம் முப்புளோரைடு (Rhodium trifluoride) என்பது RhF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் டயா காந்தப்பண்புடன் ஒரு திண்மமாக ரோடியம் முப்புளோரைடு காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(III) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
60804-25-3 | |
ChemSpider | 28687977 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21688473 |
| |
பண்புகள் | |
RhF3 | |
வாய்ப்பாட்டு எடை | 159.90 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 5.71 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
புறவெளித் தொகுதி | R3c |
Lattice constant | a = 4.873, c = 13.550 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுரோடியம் முக்குளோரைடை புளோரினேற்றம் செய்தால் ரோடியம் முப்புளோரைடு உருவாகிறது.
- 2 RhCl3 + 3 F2 → 2 RhF3 + 3 Cl2
வனேடியம் முப்புளோரைடை ஒத்த கட்டமைப்பையே ரோடியம் முப்புளோரைடும் ஏற்கிறது என்று எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இக்கட்டமைப்பில் உலோகம் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலை அடைகிறது[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ L. Grosse, R. Hoppe (1987). "Zur Kenntnis von Sr2RhF7. (Mit einer Bemerkung zur Kristallstruktur von RhF3)". Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 552 (9): 123-31. doi:10.1002/zaac.19875520914.