ரோபேர்ட் நோசிக்

ரோபேர்ட் நோசிக் (நவம்பர் 16, 1938 - சனவரி 23, 2002) ஒரு அமெரிக்க அரசியல் சிந்தனையாளர், மெய்யியலாளர். இவர் சுதந்திரவாத கருத்து நிலையைக் கொண்டவர். இவரது Anarchy, State, and Utopia நூல் செல்வாக்கு மிகுந்த யோன் ரோவல்சு அவர்களின் A Theory of Justice என்ற நூலுக்கு விமர்சனமாக அமைந்தது.

ரோபேர்ட் நோசிக்
பிறப்பு(1938-11-16)நவம்பர் 16, 1938
புரூக்ளின், நியூ யோர்க் மாநிலம்
இறப்புசனவரி 23, 2002(2002-01-23) (அகவை 63)
காலம்20 ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஆய்வுமுறை · அரசியல்சார்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
utility monster, Experience Machine, Justice as Property Rights, paradox of deontology, Entitlement Theory, Deductive closure
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மக்களின் தெரிவு

தொகு

நோசிக் சமூகத்தில் தனிமனிதர்களினது உரிமைகளுக்கும் தெரிவுகளுக்கும் முக்கியத்துவம் தருகிறார். எடுத்துக்காட்டுக்கு அவர் ஒரு சிந்தனை பரிசோதனையை முன்வைக்கிறார். ஒரு புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரரைப் பாக்க மக்கள் விரும்புகிறார்கள். அந்த வீரர் அவரது அணியுடன் ஒர் ஒப்பந்தம் செய்கிறார். அதாவது பார்க்க வருபவர்கள் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தோடு அவருக்கு 25 சதம் கூட வழங்கவேண்டும் என்று. அவ்வாறே ஒரு ஆண்டு முழுவதும் மக்கள் அந்த விளையாட்டு வீரருக்காக 25 சதம் பிறம்பாக இடுகின்றார்கள். அந்த ஆண்டில் 1 மில்லியன் மக்கள் ஆட்டங்களை பாத்தனர் என்று வைத்துக் கொண்டால், அந்த வீரருக்கு $250 000 கிடைக்கிறது. இந்த விளையாட்டு வீரர் சராசரி வருமானத்தை விட, அல்லது எல்லோருடைய வருமானத்தையும் விட பல மடங்கு வருமானத்தைப் பெறுகிறார். இவருக்கு இந்த வருமானம் நியாமனதா, சொந்தமானதா?

அந்த வீரருக்கு 25 சதம் கொடுத்த ஒவ்வொரு நபரும் தனது முழுமையான விருப்பின் பேரிலேயே கொடுத்தார்கள். எனவே அந்த சொத்தை வரி மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ மீள் விநியோகம் செய்வது அந்த வீரரின் உரிமைகளை வன்முறையாக மறுத்தே முடியும் என்பது நோசிக்கின் கூற்று ஆகும்.[1]

நோசிக் கூற்றுக்கள்

தொகு
  • "எல்லோரிடம் இருந்தும் அவர்களின் தெரிவுகளுக்கு அமைய, எல்லோருக்கும் அவர்கள் தெரியப்படுவதற்கு அமைய" - ("From each as they chose, to each as they are chosen")
  • "liberty disrupts patterns"

மேற்கோள்கள்

தொகு
  1. Theodore Schick, Jr. & Lewis Vaughn. 2002. Doing Philosophy: An Introducton to Thought Experiments. Toronto: Mc Graw Hill. பக்கங்கள்: 358-359
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபேர்ட்_நோசிக்&oldid=2895630" இலிருந்து மீள்விக்கப்பட்டது