ரோமைட்டு

ஆக்சைடு கனிமம்

ரோமைட்டு (Roméite) என்பது (Ca,Fe,Mn,Na)2(Sb,Ti)2O6(O,OH,F) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தேன் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் அறுயெண்முகப் படிகத்திட்டத்தில் படிகமாகும் ஒரு கால்சியம் ஆண்டிமோனேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. 5.5-6.0 என்ற மோவின் அளவுகோல் கடினத்தன்மை கொண்டதாக ரோமைட்டு காணப்படுகிறது. அல்சீரியா, ஆத்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பா, யப்பான், நியூசிலாந்து, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற இடங்களில் உருமாறிய பாறை வகை இரும்பு-மாங்கனீசு படிவுகளிலும் நீர்வெப்ப ஆண்டிமனி இருப்புப் படிவுகளின் விளிம்புகளிலும் ரோமைட்டு கிடைக்கிறது.

ரோமைட்டு
Romeite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Ca,Fe,Mn,Na)2(Sb,Ti)2O6(O,OH,F)
இனங்காணல்
நிறம்தேன் மஞ்சள்
படிக அமைப்புஅறுயெண்முக கனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை5.5–6.0
மேற்கோள்கள்[1][2]

இத்தாலி நாட்டின் செயிண்ட்டு மார்சல் நகரிலுள்ள பிரபோர்நாசு சுரங்கத்தில் முதன்முதலில் ரோமைட்டு கண்டறியப்பட்டது. பிரான்சு நாட்டின் கனிமவியலாலர் யீன் பாப்டிசுட்டு எல். ரோம் டி லில்சே அவர்கள் நினைவாக கனிமத்திற்கு ரோமைட்டு எனப் பெயரிடப்பட்டது. ரோமைட்டு படிகங்களில் நீரின் உள்ளடக்கம் தொடர்பான ஆய்வுகளை பிரக்கெர் மற்றும் அவர் குழுவினர்கள் அகச்சிவப்புக் கதிர் நிறமாலையியல் மூலம் 1997 ஆம் ஆண்டு மேற்கொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  • Brugger, J., R. Gieré, Stefan Graeser, Nicolas Meisser, The crystal chemistry of roméite, Contributions to Mineralogy and Petrology, Volume 127, Numbers 1-2 / March, 1997, pp. 136–146
  • Dana, James Dwight (1853) Manual of Mineralogy: Including Observations on Mines, Rocks, Reduction of Ores and the Application of the Science to the Arts, Durrie and Peck (5th edition), p. 303
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமைட்டு&oldid=2810747" இலிருந்து மீள்விக்கப்பட்டது