ரோயா சதாத்
ரோயா சாதத் (Roya Sadat) (பிறப்பு 1981[1][2] ) ஆப்கானித்தானைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும். இயக்குநரும், தாலிபானுக்கு பிந்தைய காலத்தில் ஆப்கானிய திரைப்படங்களின் வரலாற்றில் முதல் பெண் இயக்குநராகவும் இருந்தார். மேலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி பற்றியும், கட்டுப்பாடுகள் என்ற தலைப்பிலும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் உருவாக்கத் தொடங்கினார். நாட்டில் தலிபான் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, இவர் தனது முதல் திரைப்படமான "திரீ டாட்ஸ்" என்பதை உருவாக்கினார்.[3][4] இந்தப் படத்திற்காக இவர் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம் உட்பட ஒன்பது விருதுகளில் ஆறு விருதுகளைப் பெற்றார்.[5] 2003ஆம் ஆண்டில், இவரும் இவருடைய சகோதரி அல்கா சதாத்தும் ரோயா பிலிம் ஹவுஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனத்தில் கீழ் 30க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் திரைப்படங்களையும் தயாரித்தனர்.[4][6] இவர் இப்போது பஹஸ்த் காமோஷ் என்ற தொலைக்காட்சித் தொடரை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார்.[7]
ரோயா சாதத் | |
---|---|
رویا سادات | |
தாய்மொழியில் பெயர் | رویا سادات |
பிறப்பு | 1981 (அகவை 42–43) ஹெறாத் நகரம், ஆப்கானித்தான் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர் |
சுயசரிதை
தொகுரோயா சதாத், 1983இல் சோவியத்–ஆப்கான் போரின் போதுஆப்கானித்தானின் எறாத்தில் பிறந்தார். [3] [3] இவர் எறாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் அரசியல் அறிவியலைப் பயின்றார். மேலும், 2005இல் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார். 2006ஆம் ஆண்டில், திரைப்பட இயக்கத்தில் ஒரு சான்றிதழ் படிப்புக்காக பூசான் ஆசிய கழகத்தில் படித்தார்.[6] கல்வியிலும் சமூக வாழ்விலும் பெண்ணின் சுதந்திரத்திற்கு தாலிபான்கள் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இவரது தாய் தைரியமாக தனது ஆறு மகள்களுக்கும் வீட்டிலேயே கல்வி கற்பிக்க முடிவு செய்தார்.[4] பாரசீக மொழிமொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளில் சிட் ஃபீல்ட் எழுதிய புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தனக்குத் தானேப் பயிற்றுவித்துக் கொண்டார்.
தொழில்
தொகு[3] இவர் திரைப்படங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தனது நாட்டில் தலிபான் ஆட்சியின் போது கட்டுப்பாடான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவர் நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் கதைகளை எழுதத் தொடங்கினார்.[6][8] 1999இல், தாலிபான் ஆட்சியின் போது கூட, இவர் ஆப்கானியப் பெண்களின் குழுவிற்காக ஒரு நாடக நிகழ்ச்சிக்காக ஒரு நாடகத்தை எழுதி இயக்கியிருந்தார்.[7]
தலிபான் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, இவர் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இவரது முதல் திரைப்படம் மதிரீ டாட்ஸ் ஆகும். இது ஆப்கானித்தானில் சே நாட்டா,[6] [3] அல்லது எலிப்சிஸ் என்று அழைக்கப்பட்டது . இவர் இந்த படத்தை இரண்டு வாரங்களுக்குள், டிஜிட்டல் நிகழ்படம் வடிவில் உருவாக்கினார். இந்தப் படம், தரமான தயாரிப்பாக இல்லாவிட்டாலும், ஆப்கானித்தானில் பெண்களின் நிலை குறித்து மேற்கத்திய பார்வையாளர்களுக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தது.[3] சதாத் குல் அப்ரோசு என்பவரை இந்த படத்தில் முக்கிய பெண் பாத்திரத்திற்காக நடிக்க வைத்தார். இருப்பினும் அப்ரோசுக்கு நடிப்பில் முறையான பயிற்சி இல்லை. அப்ரோசை அவரது கணவரும் குடும்ப உறுப்பினர்களும் படத்தில் நடிக்கவிடாமல் தடுத்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். ஆனால் இறுதியில் அவர் படத்தில் நடித்தார். [3] இந்த படம் உலகம் முழுவதும் "புகழ்பெற்ற விமர்சனங்களை" பெற்றது.[7]
தொலைக்காட்சி
தொகு2007 ஆம் ஆண்டில், ரோயா ஆப்கானித்தான் தொலைக்காட்சியான டோலோ தொலைக்காட்சியில் பணியாற்றினார். சீக்ரட்ஸ் ஆப் திச் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரபலமான நாடகத் தொடரை தனது நாட்டு மக்களின் தற்போதைய வாழ்க்கை தொடர்பான 50 அத்தியாயங்களுடன் தயாரித்தார்.[8][9]
நூலியல்
தொகு- Graham, Mark A. (2010). Afghanistan in the Cinema. University of Illinois Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03527-2.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet the 2018 International #WomenofCourage". United States Department of State. March 21, 2018. Archived from the original on March 22, 2018. பார்க்கப்பட்ட நாள் March 25, 2018.
- ↑ Nili, Hadi (March 24, 2018). "نام رویا سادات در فهرست 'زنان شجاع' وزارت خارجه آمریکا". BBC Persian. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Graham 2010.
- ↑ 4.0 4.1 4.2 "Voice of the silenced". 17 December 2014. http://www.thehindu.com/features/metroplus/interview-with-afghan-filmmaker-roya-sadat/article6701167.ece.
- ↑ Nawa, Fariba (2007). "New Voices New Afghanistan". Aramco World. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "Roya Sadat: 'She even changed her name to Sohrab, a boy's name'". 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ 7.0 7.1 7.2 "International Jury". Roya Sadat. International Film Festival of Kerala 2015. Archived from the original on 2 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 8.0 8.1 "Ways Of Seeing: Rhetoric And Reality Report on the 7th IAWRT Asian Women's Film Festival, Seminar and Exhibitions India International Centre, New Delhi March 5, 7 and 8, 2011" (PDF). The Network of Women in Media, India. 2011. Archived from the original (pdf) on 16 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mohan, Reena (20 October 2011). "They question with their camera". The Hindu Businessline. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.