அல்கா சதாத்

ஆப்கானிய திரைப்பட இயக்குநர்

அல்கா சதாத் (Alka Sadat ) (பிறப்பு 1988) ஆப்கானித்தானைச் சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமாவார். இவர் தனது முதல் 25 நிமிட திரைப்படமான ஹாஃப் வேல்யூ லைஃப் என்பதன் மூலம் பிரபலமானார். இது சமூக அநீதியையும் குற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது. படம் பல விருதுகளை வென்றது. இவர் ஆப்கானித்தானின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ரோயா சதாத்தின் தங்கையாவார். இரண்டு சகோதரிகளும் 2004 முதல் பல திரைப்பட தயாரிப்புகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும், ரோயா பிலிம் ஹவுஸ் என்ற நிற்வனத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.[1] இவரது முதல் படத்திற்காக இவர் ஆப்கானித்தான் அமைதிப் பரிசைப் பெற்றார். அதன்பிறகு பல ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பணியாற்றியதற்காக பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.[2]

அல்கா சதாத்
الکا سادات
2015இல் அல்கா சதாத்
பிறப்பு1988 (அகவை 35–36)
ஹெறாத் நகரம், ஆப்கானித்தான்
பணிஆவணப்பட இயக்குநர்
அறியப்படுவதுரோயா பிலிம் ஹவுஸ் நிறுவனர், ஹாஃப் வேல்யூ லைஃப் (2008), வீ ஆர் போஸ்ட்-மாடர்னிஸ்ட்
வலைத்தளம்
www.rfh-c.org

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட "முஸ்லிம் உலகம்: ஒரு குறும்பட விழா" என்ற நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் பங்கேற்றனர். அங்கு ஆப்கானித்தானிலிருந்து 32 படங்கள் இடம்பெற்றன. 2013ஆம் ஆண்டில், முதல் ஆப்கானித்தான் சர்வதேச மகளிர் திரைப்பட விழாவை நடத்த இவர் ஒருங்கிணைத்தார்.[3] இதுவரை திரைப்பட தயாரிப்பில் 15 ஆவணப்படங்களும், ஒரு குறும்படமும் இவரது பங்களிப்புகளாகும்.[4]

சுயசரிதை தொகு

அல்கா சதாத் 1988இல் ஆப்கானித்தானின் எறாத்தில்[5] தாலிபான் ஆட்சி இருந்த நேரத்தில் பிறந்தார். கல்வியிலும் சமூக வாழ்விலும் பெண்ணின் சுதந்திரத்திற்கு தாலிபான்கள் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இவரது தாய் தைரியமாக தனது ஆறு மகள்களுக்கும் வீட்டிலேயே கல்வி கற்பிக்க முடிவு செய்தார்.

அல்கா சதாத் தனது சகோதரி ரோயா சதாத்துக்கு த்ரி டாட்ஸ் என்ற புனைவுத் திரைப்படத்தை உருவாக்க ஆடை வடிவமைப்பாளராக உதவி செய்யத் தொடங்கினார். 60 நிமிடப் படமான இது ஒரு விதவை நாட்டில் நிலவும் போதைப்பொருள் விற்பனையின் சூழலில் வாழ முயற்சிக்கும் இன்னல்களை எடுத்துக்காட்டுகிறது.[6] பின்னர் இவருடைய சகோதரி இவரை ஆவணப்படங்களை உருவாக்கும்படி அறிவுறுத்தினார். ஆவணப்படங்களை தயாரிப்பதில் அல்கா சதாத்துக்கு எந்த அனுபவமும் இல்லாததால், ஆவணப்படங்களை இயக்கும் முன் காபூலில் உள்ள ஜெர்மன் கோதே நிறுவனல் கலந்து கொண்டார்.[3]

முதல் ஆவணப்படம் தொகு

இவரது முதல் 25 நிமிட குறும்படம் ஹாஃப் வேல்யூ லைஃப் என்பது 2008இல் உருவாக்கப்பட்டது. இந்தப் படம் முதல் பெண் உரிமை ஆர்வலர் மரியா பஷீரின் பாத்திரத்தை எடுத்துக்காட்டியது. குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கையாளும் எறாத்து மாகாணத்தைச் சேர்ந்த ஆப்கானித்தான் பெண் அரசு வழக்கறிஞராக பஷீர் தனது நிஜ வாழ்க்கை பாத்திரத்தை சித்தரித்தார். ஆவணப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குடும்ப மணமுறிவு மற்றும் குழந்தை மணப்பெண்களின் கற்பழிப்பு வழக்குகள் தொடர்பானவை.[7][8] இந்த படத்திற்காக இவர் 2013 இலண்டன் பெண்ணிய திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றார்.[9]

சொந்தத் தயாரிப்பு தொகு

இயக்குநராக, 2005இல், ஆப்கானித்தானில் 14 வயது சிறுமியின் அவலத்தை எடுத்துக்காட்டும் விதமாக தனது ரோயா பிலிம் ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வீ ஆர் போஸ்ட்-மாடர்னிஸ்ட் என்ற படத்தை சதாத் உருவாக்கினார்.[10] 2008-2009 காலப்பகுதியில் இவர் பாங்கேயா அறக்கட்டளை சார்பில், ஏ வுமன் சிங் இன் தி டெசர்ட் என்ற ஒரு ஆவணப்படத்தை இயக்கினார்.[11] 2011இல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற "மகளிர் குரல்கள் இப்போது திரைப்பட விழாவில்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது ஆவணப்படங்களை வெளியிட்டார்.[12]

 
இத்தாலி திரைப்பட விழா 2007

மேற்கோள்கள் தொகு

  1. "Roya Sadat: 'She even changed her name to Sohrab, a boy's name'". 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
  2. "Alka Sadat". Empowering Women All Around the World – Economically, Socially, Politically. Archived from the original on 17 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
  3. 3.0 3.1 "Afghan Filmmaking on the Edge: Interview with Alka Sadat". Women's Voices Now. 27 March 2011. Archived from the original on 2016-06-25. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  4. "First International Women Film Festival-Herat" (PDF). International Federation for Human Rights. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  5. Alka Sadat பரணிடப்பட்டது 2016-06-25 at the வந்தவழி இயந்திரம், womensvoicesnow.org, Retrieved 7 June 2016
  6. "Ways of Seeing: Rhetoric and Reality- Report on the 7 IAWRT Asian Women's Film Festival, Seminar and Exhibitions, India International Centre, New Delhi, March 5, 7 and 8, 2011" (PDF). Network of Women in Media, India. 2011. Archived from the original (pdf) on 16 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Half-Value Life:A Documentary on Afghanistan's Only Female Prosecutor". International Museum of Women (MUSLIMA). Archived from the original on 4 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Elmasry, Faiza (29 April 2013). "Exhibit Challenges Stereotypes of Muslim Women". Voice of America News. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  9. "Alka Sadat". London Feminist Film Festival.com. Archived from the original on 5 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "We are Post Modernist". Cultureunplugged.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
  11. "Director:Alka Sadat at Women's Voices Now". Women's Voices Now. Archived from the original on 8 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
  12. "Women in the Muslim world, as captured on film:A Los Angeles screening samples contributions to an online film festival". LA Times. 22 March 2011. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_சதாத்&oldid=3857638" இலிருந்து மீள்விக்கப்பட்டது