ரோரிடுலா

ரோரிடுலா
Roridula gorgonias.jpg
ரோரிடுலா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இரு வித்திலை
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: ரோரிடுலாசியீ
Engl. & Gilg (1924) nom.cons.
பேரினம்: Roridula
L. (1764)
இனம்

Roridula dentata
Roridula gorgonias

Roridula distribution.svg
Roridula distribution

ரோரிடுலா என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது ரோரிடுலாசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு சிறிய புதர்ச் செடியாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். தண்டில் இலைகள் இதழடுக்கு முறையில் அமைந்திருக்கும். இலையின் ஓரத்தில் உணர்வு முடிகள் பல உள்ளன.இந்த முடிகளில் பசை போல் ஒட்டக்கூடிய திரவம் இருக்கும். இதனைச் தேன் எனக் கருதி பூச்சிகள் வந்து அமரும்போது இது பசையில் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் செரிக்கப்படுகிறது. குறிப்பாக சிலந்தி, தேனீ முதலியன. இந்த செடியின் நீளம் 120 முதல் 150 செ.மீ. வரை மாறுபட்டு இருக்கும். இதனை போர்ச்சுகல் போன்ற நாடுகளில் ஈக்களைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கிறார்கள்.

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு அட்டவணைதொகு

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

உசாத்துணைதொகு

ஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள் ', அறிவியல் வெளியீடு. 2002.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோரிடுலா&oldid=2917709" இருந்து மீள்விக்கப்பட்டது