லாகோர்தியா வானூர்தி நிலையம்
லாகோர்தியா வானூர்தி நிலையம் (LaGuardia Airport, (ஐஏடிஏ: LGA, ஐசிஏஓ: KLGA, எப்ஏஏ LID: LGA) /ləˈɡwɑːrdiə/) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வானூர்தி நிலையமாகும். குயின்சு பரோவின் கிழக்கு எல்ம்ஹர்ஸ்ட்டுப் பகுதியில் பிளஷிங் விரிகுடா மற்றும் பௌவரி விரிகுடா நீர்நிலைகளை அடுத்து அமைந்துள்ளது. அசுடோரியா, ஜாக்சன் ஹைட்சு ஆகிய குயின்சு சுற்றுப்புறங்களும் இதற்கு அண்மையில் உள்ளன.
லாகோர்தியா வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||
உரிமையாளர் | நியூயார்க் நகரம் | ||||||||||||||
இயக்குனர் | நியூயார்க் நியூ செர்சி துறைமுக ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | நியூயார்க் நகரம் | ||||||||||||||
அமைவிடம் | கிழக்கு எல்ம்ஹர்ஸ்ட், குயின்சு, நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | ||||||||||||||
மையம் | டெல்டா ஏர்லைன்ஸ் | ||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் | அமெரிக்கன் எயர்லைன்ஸ் | ||||||||||||||
உயரம் AMSL | 21 ft / 6 m | ||||||||||||||
இணையத்தளம் | www.laguardiaairport.com | ||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||
FAA Airport Diagram | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
உலங்கூர்தித் தளங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2013) | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம்[1] |
நியூயார் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே பன்னாட்டு, லாகோர்தியா, மற்றும் நியூவர்க் லிபர்ட்டி பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் கூட்டாக ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகப்பெரும் வானூர்திநிலைய அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இவை கூட்டாக பயணிகள் போக்குவரத்தில் உலகில் இரண்டாம் நிலையிலும் வானூர்தி இயக்கங்களில் முதலாவதாகவும் உள்ளன.
2011இல் இந்த வானூர்திநிலையம் 24.1 மில்லியன் பயணிகளும்[2] 2013இல் ஏறத்தாழ 26.7 மில்லியன் பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர்; இது ஆண்டுக்கு 6.6% வளர்ச்சியாகும்.[3]
இந்த நிலையம் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை அச்சாக விளங்குகிறது.[4] தவிர அமெரிக்கன் எயர்லைன்சிற்கும் அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்திற்கும் குவிய மையமாக உள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ FAA Airport Master Record for LGA (Form 5010 PDF), retrieved March 15, 2007
- ↑ "LGA Facts & Info". Archived from the original on பிப்ரவரி 22, 2010. பார்க்கப்பட்ட நாள் June 28, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "LGA gets huge passenger growth". Archived from the original on ஜனவரி 7, 2014. பார்க்கப்பட்ட நாள் June 28, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ டெல்டா ஏர்லைன்ஸ்(December 16, 2011). "Delta Unveils Schedule for New Domestic Hub at New York's LaGuardia Airport". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 15, 2012.